நேபாளத்துக்கு எதிரான போட்டியில் விளையாடிய யு.எஸ்.ஏ அணி 35 ரன்களுக்கு அவுட்டாகி மோசமான வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது.
ஐசிசி உலகக் கோப்பைத் தொடர் லீக் 2 போட்டியில் நேபாளம் – யு.எஸ்.ஏ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடி யு.எஸ்.ஏ அணி 35 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியில் சேவியர் மார்செல் 15 ரன்கள் அடித்ததே அதிகபட்ச ரன்னாகும்.
நேபாளம் அணியில் சுஷன் பாரி 16 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். 12 ஓவர்களை மட்டுமே யு.எஸ்.ஏ அணி எதிர்கொண்டது. இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் குறைந்த ஓவரில் எதிரணியை சுருட்டிய சாதனையை நேபாளம் அணி நிகழ்த்தி உள்ளது.

ஒரு நாள் போட்டிகளில் யு.எஸ்.ஏ அடித்துள்ள 35 ரன்களே குறைந்தபட்ச ரன்னாகும். இதற்கு முன் கனடா 36, ஜிம்பாப்வே 38, இலங்கை 43 ரன்கள் குறைந்தபட்ட ரன்களாகும்.
நேபாளம் அணி 32 பந்துகளில் இலக்கை எட்டி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி 17.2 ஓவர்களில் முடிவுக்கு வந்தது. இதுவே குறைந்த ஓவரில் மொத்த போட்டியும் முடிவுக்கு வந்த சாதனையும் படைத்துள்ளது.

9.30 மணிக்கு தொடங்கிய போட்டி 11.09 மணிக்கு முடிந்து விட்டது. 50 ஓவர் போட்டி ஒரு மணி நேரம் 39 நிமிடத்திற்குள் முடிந்தது இதுவே முதல் முறையாகும்.