16 வயதில் அரை சதம்- நேபால வீரர் சாதனை!! 1

நேபாளத்தை சேர்ந்த ரோஹித் என்னும் பதினாறு வயது வீரர் சர்வதேச போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் தனது முதல் சில போட்டிகளில் 16 வயது 213 நாட்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 59 ரன்கள் அடித்து இருந்தார். இதுவே சாதனையாக இருந்தது.

அதற்கு அடுத்ததாக பாகிஸ்தானின் சாகித் அப்ரிடி 37 பந்துகளில் சதம் விளாசி இருந்தார். அவர் செய்தது 16 வயது 217 நாட்கள் ஆகும். இந்த சதம் இலங்கை அணிக்கு எதிராக வந்தது.16 வயதில் அரை சதம்- நேபால வீரர் சாதனை!! 2

தற்போது நேபாளத்தைச் சேர்ந்த ரோஹித் என்பவர் 16 வயது 146 நாட்களில் அரைசதம் அடித்து சர்வதேச போட்டிகளில் பெரும் சாதனை படைத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக நடந்த சர்வதேச போட்டியில் நேபாள அணி வெற்றி பெற்றது.

இதற்கு முன்னதாக 15 வயது 135 நாட்களில் சர்வதேச போட்டிகள் அறிமுகமாகி மிக இளம்வயது சர்வதேச வீரர் எனும் சாதனையை படைத்து இருந்தார். சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் இந்த சாதனையை நிகழ்த்தினார். இதற்கு முன்னதாக 2016ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் கமலேஷ் நாகர்கோட்டியின் பந்துகளை ஒரே ஓவரில் 24 ரன்கள் விளாசி இருந்தார்.

தற்போது நேபாள நாடு சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரம் கொடுக்கப்பட்ட இருந்து அந்த அணி அடுத்தடுத்து நல்ல போட்டு வருகிறது மேலும் இவருக்கு அற்புதமான பல வீரர்கள் இந்த நாட்டிற்கு கிடைத்துள்ளன.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், தொடக்க வீரர் கே.எல்.ராகுலும், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்தும், இனவெறியைத் தூண்டும் வகையிலும் பதிலளித்ததால் கடும் விமர்சனங்கள் எழுந்தன16 வயதில் அரை சதம்- நேபால வீரர் சாதனை!! 3

ஆனால், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த விவகாரத்தில், இருவருக்கும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை விதித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நடவடிக்கை எடுத்தது

அத்துடன், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் அணியில் நீக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் உடனடியாக நாடு திரும்பினர். இந்த தடையால் பாண்டியா தனது ஸ்பான்சரையும் பறிகொடுத்தார்.பின்னர், விளக்கத்தை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ நிர்வாகக்குழு அவர்கள் மீதான தடையை நீக்கியது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *