இந்திய அணிக்கு ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் துணை கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் என வதந்திகள் வந்த நிலையில் அவரது பெயர் நேற்று அறிவிக்கப்ட்ட அணியில் இடம் பெற்றது. இதனால் விராட் கோலி கேப்டனாக செயல் படுவார். மேலும் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டால் ரோஹித் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தெரிந்த்தது, இன்னிலையில் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி ஒரு அணிகளுக்கு இடையிலான தொடரில் துணை கேப்டனை நியமிப்பது இதுவே முதன் முறை.
துணை கேப்டன் ரோகித் சர்மா தனது தலைமயிலான மும்பை இந்தியன்ஸ் அணி 3 முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மாவிற்கு இந்திய அணியில் கேப்டன்சிப் தொடர்பான பொருப்பு கொடுக்கப்படுவது இதுவே முதன் முறை.
இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணி : விராட் கோலி(கேப்டன்) , சிகர் தவான் , அஜிங்கயா ரகானே, லோகேஷ் ராகுல், ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், மனீஷ் பாண்டே, மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்) , கேடர் ஜாதவ், அக்சர் படேல் , குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ரா,ஸரடுல் தகூர், யுஜவேந்திர சகால்
இந்த அணி 20 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 6 ஆம் தேதி வரை 5 ஒரு நாள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளது
இந்தியா இலங்கையில் சுற்று பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது . முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைபற்றியுள்ளது . தற்போது 3வது டெஸ்ட் போட்டியிலும் இல்ங்கையை 300+ ரன்களுக்கு மேல் ஃபாலோ ஆன் செய்ய வைத்து வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
டெஸ்ட் தொடர் முடிந்த உடன் 20ஆம் தேதி ஒரு நாள் மற்றும் டி20 தொடர் ஆரம்பம் ஆக உள்ளது. இதற்க்கான அணியும் நேற்று 15 பேர் கொண்ட ஒரே அணியாக அறிவிக்கப்படது.
கடந்த வருடம் 43 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணியில் ஒரு போட்டிகல் பொக மீதம் உள்ள 42 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தர்மசாலவில் நடந்த ஒரே ஒரு போட்டியை தோல் பட்டை காயம் காரணமாக தவர விட்டார் என்பது குறிப்பிடத்த்க்கது. அது போக 18 டெஸ்ட் போட்டிகளிலும் அடுத்தடுத்து விளையாடியுள்ளார்.
இந்த வருட இறுதியில் அடுத்தடுத்து 23 போட்டிகளில் இந்திய மண்ணில் விளையாடவுள்ள இந்திய அணிக்கு அவரது சேவை தேவை என்பதாலும் இந்த கால கட்டங்களில் காயம் ஏற்ப்பட்டு விட கூடாது என்பதற்க்காகவும் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என வதந்திகள் வந்த வண்ணம் இருந்தது. இந்திய மண்ணில் ஆஸ்திரலியா,இலங்கை,நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் 3 டெஸ்ட், 13 ஒரு நாள் மற்றும் 11 டி20 போட்டிகளில் விளியாடவுள்ளது குற்ப்பிடத்தக்கது. அதன்ன் பின்னர் தென்னப்பிரிக்க பயணம் செய்யும் இந்திய அணி அங்க ஒரு முழு அளவிலான தொடரில் விளையாட உள்ளது. மேலும் சில நாட்களுக்கு முன்னர் தான் விராட் கோலி படத்திரிக்கையாளர் சந்திப்பில் அப்படியான வதந்திகள் எங்கிருந்து வருகின்றன என தெரியவில்லை. நான் கண்டிப்பகா விளையாட உள்ளேன் என வதந்திக்கு முற்றுப்ப்ள்ளி வைத்தார்.