ஒரே பாலின திருமணம் செய்த நியுஸி மகளிர் கிரிகெட் வீராங்கனைக்கு குழந்தை!! ட்விட்டரில் மகிழ்ச்சியாக பதிவு செய்த தம்பதிகள்! 1

நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை ஆமி சாட்டர்த் வொயிட், தனது அணியை சேர்ந்த மற்றொரு வீராங்கனையான லியா தஹுஹு-ஐ கடந்த மார்ச் 2017-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது நிச்சயதார்த்தம் 2014 ஆம் ஆண்டு நடந்தது.

இந்த நிலையில் ஆமி சாட்டர்த் வொயிட், “லியா தஹுஹு கர்ப்பமாக உள்ளதாக தனது ட்விட்டரில் அறிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டரில் , புதிய ஆண்டின் தொடக்கத்தில் எங்களது முதல் குழந்தையை நான் எதிர்பார்க்கிறேன். லியாவும், நானும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த புதிய அத்தியாயத்தில் நாங்கள் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறோம் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என கூறி உள்ளார்.

ஒரே பாலின திருமணம் செய்த நியுஸி மகளிர் கிரிகெட் வீராங்கனைக்கு குழந்தை!! ட்விட்டரில் மகிழ்ச்சியாக பதிவு செய்த தம்பதிகள்! 2
New Zealand women’s team (White Ferns) skipper Amy Satterthwaite on Tuesday announced her pregnancy and announced a break from cricket.

அதற்கு பதிலளித்த லியா தஹுஹு, தனது கூட்டாளியின் ட்வீட்டை மறு ட்வீட் செய்து “பின்னர் நாங்கள் 3 பேர் ” என்று கூறி உள்ளார்.

நியூசிலாந்து அணிக்காக ஆமி சாட்டர்த் வொயிட், 119 ஒருநாள் போட்டிகளிலும், 99 இருபது ஓவர் சர்வதேச போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

லியா தஹுஹு 66 ஒருநாள் மற்றும் 50 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

நியூசிலாந்தில் ஒரே பாலின திருமணம் ஆகஸ்ட் 19, 2013 முதல் சட்டப்பூர்வமானது. சட்டப்பூர்வமாக்குவதற்கான மசோதாவை நியூசிலாந்து பிரதிநிதிகள் சபை ஏப்ரல் 17, 2013 அன்று 77 வாக்குகளில் 44 வாக்குகளை பெற்று நிறைவேற்றியது. ஏப்ரல் 19 அன்று அரசு ஒப்புதல் அளித்தது.

ஒரே பாலின திருமணம் செய்த நியுஸி மகளிர் கிரிகெட் வீராங்கனைக்கு குழந்தை!! ட்விட்டரில் மகிழ்ச்சியாக பதிவு செய்த தம்பதிகள்! 3
“As soon as the Women’s Master Agreement (already agreed in principle) is signed off and confirmed, Amy will be announced as one of our contracted WHITE FERNS for the 2019-20 year,” White said.

இது போல் நியூசிலாந்து அணியை சேர்ந்த முன்னணி வீராங்கனை ஆல்–ரவுண்டர் ஹாலெ ஜென்சன், ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் 23 வயது வீராங்கனை நிகோலா ஹன்கோக்கை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு, தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் டேன் வான் நீகெர்க் தனது அணி வீராங்கனை மரிசேன் காப்பை திருமணம் செய்து கொண்டார்.

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *