சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் பால் டேம்பரிங்: 4 போட்டிகளுக்கு ஆட நட்சத்தி வீரருக்கு தடை 1

மே.இ.தீவுகளின் அதிரடி வீரர் நிகோலஸ் பூரன் 4 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பால் டேம்பரிங் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவருக்கு இந்தத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனது விரல் நகத்தினால் பந்தின் தன்மையை மாற்றி சேதப்படுத்தியது வீடியோவில் பதிவானது. இந்தக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார் நிகோலஸ் பூரன், இதனையடுத்து 4 டி20 போட்டிகளில் அவர் ஆட முடியாது.

இதனையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒரு டி20 போட்டிகளில் நிகோலஸ் பூரன் ஆட முடியாது.சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் பால் டேம்பரிங்: 4 போட்டிகளுக்கு ஆட நட்சத்தி வீரருக்கு தடை 2

4 போட்டிகள் தடையுடன் அவரது கணக்கில் 5 தகுதியிழப்புப் புள்ளிகள் ஏறியுள்ளது.

வெஸ்ட்இண்டீஸ்-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி உத்தபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அஸ்ஹார் ஆப்கன் 86 ரன்னும், ஹஸ்ரத்துல்லா ஜஜாய் 50 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். முகமது நபி 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் பால் டேம்பரிங்: 4 போட்டிகளுக்கு ஆட நட்சத்தி வீரருக்கு தடை 3

பின்னர் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் 145 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 109 ரன்னும், ரோஸ்டன் சேஸ் 32 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 42 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஷாய் ஹோப் ஆட்டநாயகன் விருதையும், ரோஸ்டன் சேஸ் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி ஒருநாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான மூன்று 20 ஓவர் போட்டியில் முதலாவது போட்டி லக்னோவில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *