இந்திய அணிக்குள் இடம் பிடிக்க போராடும் மேலும் ஒரு அதிரடி வீரர்! 347 ரன்களை அசால்டாக சேஸ் செய்து மாஸ்! 1

ரஞ்சி டிராபியில் விதர்பா அணியால் நிர்ணயிக்கப்பட்ட 347 ரன்னை நிதிஷ் ராணாவின் அதிரடி சதத்தால் எளிதாக எட்டிப்பிடித்து அசத்தியது டெல்லி.

ரஞ்சி டிராபியில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி – விதர்பா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த விதர்பா 179 ரன்னில் சுருண்டது. டெல்லி அணியும் முதல் இன்னிங்சில் திணறி 163 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

16 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய விதர்பா கணேஷ் சதிஷ் (100) சதத்தால் 330 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதனால் டெல்லி அணியின் வெற்றிக்கு 347 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது விதர்பா. 347 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்திருந்தது. சண்டேலா 2 ரன்னுடனும், டலால் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்திய அணிக்குள் இடம் பிடிக்க போராடும் மேலும் ஒரு அதிரடி வீரர்! 347 ரன்களை அசால்டாக சேஸ் செய்து மாஸ்! 2
Delhi’s Nitish Rana play a shot on the last day of Ranji trophy match against Bengal at Feroze Shah Kotla stadium in New Delhi on oct 25th 2015. Express photo by Ravi Kanojia.

இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. சண்டேலா, டலால் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சண்டேலா 75 ரன்களும், டலால் 82 ரன்களும் அடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்தது.

அதன்பின் வந்த நிதிஷ் ராணா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவருக்கு துணையாக துருவ் ஷோரே 48 பந்தில் 44 ரன்கள் அடித்தார். ராணா 68 பந்தில் 105 ரன்கள் விளாச டெல்லி 73 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் முன்னாள் சாம்பியன் மும்பை – உத்தரபிரதேசம் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த உத்தரபிரதேச அணி, விக்கெட் கீப்பர் உபேந்திர யாதவின் இரட்டை சதத்தின் (203 ரன்) உதவியுடன் 8 விக்கெட் இழப்புக்கு 625 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணிக்குள் இடம் பிடிக்க போராடும் மேலும் ஒரு அதிரடி வீரர்! 347 ரன்களை அசால்டாக சேஸ் செய்து மாஸ்! 3

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி 3-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 353 ரன்கள் எடுத்திருந்தது. சர்ப்ராஸ் கான் 132 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.

இந்த நிலையில் கடைசி நாளான நேற்று சர்ப்ராஸ் கான் தனி வீரராக அணியை முன்னெடுத்து சென்றார். பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் பந்து வீச்சு துளியும் எடுபடவில்லை. நிலைத்து நின்று அமர்க்களப்படுத்திய சர்ப்ராஸ் கான் பந்தை சிக்சருக்கு விளாசி முச்சதத்தை நிறைவு செய்தார். ரஞ்சி போட்டியில் மும்பை வீரர் ஒருவர் முச்சதம் அடிப்பது இது 7-வது முறையாகும். அவருக்கு கேப்டன் ஆதித்ய தாரே (97 ரன்), ஷம்ஸ் முலானி (65 ரன்) நன்கு ஒத்துழைப்பு தந்தனர். மும்பை அணி முதல் இன்னிங்சில் 166.3 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 688 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அத்துடன் இந்த ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. 10 மணி 33 நிமிடங்கள் பேட்டிங் செய்த 22 வயதான சர்ப்ராஸ் கான் 301 ரன்களுடன் (391 பந்து, 30 பவுண்டரி, 8 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் மும்பைக்கு 3 புள்ளியும், உத்தரபிரதேச அணிக்கு ஒரு புள்ளியும் கிடைத்தன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *