இவருக்கு முன்னாடி ஷாகின் அப்ரிடி சின்ன பையன்… நான் பார்த்து பயந்த ஒரே  ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; உண்மையை ஓபனாக பேசிய ரோஹித் சர்மா !!

இவருக்கு முன்னாடி ஷாகின் அப்ரிடி சின்ன பையன்… நான் பார்த்து பயந்த ஒரே  ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; உண்மையை ஓபனாக பேசிய ரோஹித் சர்மா

கிரிக்கெட்டில் தனக்கு சவாலாக இருந்த பந்துவீச்சாளர் யார் என்பதை இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ம் தேதி துவங்க உள்ள நிலையில், இந்த தொடருக்கான பயிற்சி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

செப்டம்பர் 30ம் தேதி நடைபெறும் பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை செய்ய உள்ள இந்திய அணி, அக்டோபர் 8ம் தேதி நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடரின் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்தநிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்களை ஓபனாக பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, தனக்கு சவாலாக இருந்த பந்துவீச்சாளர் யார் என்பதையும் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “ஒரு பந்துவீச்சாளர் எனக்கு எப்போதும் பெரும் சவாலாக இருந்துள்ளார் என்றால் அது தென் ஆப்ரிக்கா அணியின் டேல் ஸ்டைன் தான், நானும் அவரது பந்துவீச்சை அதிக விருப்பத்துடன் எதிர்கொள்வேன். ஸ்டைன் மிக சிறந்த வேகப்பந்து வீச்சாளர். அவரது பந்துவீச்சு முறையும், திறமையும் வியக்க வைக்கும். அவரை போன்று துல்லியமாக பந்துவீசும் வீரர்கள் மிக குறைவு என்றே நான் கருதுகிறேன். 140+ கீமீ வேகத்தில் பந்துவீசினாலும், அதையும் ஸ்விங் செய்யும் திறமை ஸ்டைனிடம் இருக்கும், இதை அவர் ஓரிரு போட்டிகளில் மட்டும் இல்லாமல் அனைத்து போட்டிகளிலும் மிக சரியாக செய்துள்ளார் என்பதே ஆச்சரியம்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.