இந்த ஆஷஷ் தொடரில் அசுரன் ஸ்டீவ் ஸ்மித் அடித்த ரன்கள் எத்தனை தெரியுமா? புள்ளிவிவரங்கள் உள்ளே 1

ஆஷஸ் தொடரில் ஏழு இன்னிங்சில் களம் இறங்கி பேட்டிங் செய்த ஸ்டீவ் ஸ்மித் 774 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார். முதல் இன்னிங்சில் 144 ரன்களும், 2-வது இன்னிங்சில் 142 ரன்களும் அடித்தார். இவரது சதங்களால் ஆஸ்திரேலியா அபாரமான வெற்றியை ருசித்தது.இந்த ஆஷஷ் தொடரில் அசுரன் ஸ்டீவ் ஸ்மித் அடித்த ரன்கள் எத்தனை தெரியுமா? புள்ளிவிவரங்கள் உள்ளே 2

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 92 ரன்கள் சேர்த்தார். ஆர்சர் வீசிய பவுன்சர் பந்து கழுத்துப் பகுதியை தாக்கியதால் மூளையளற்சி காரணமாக 2-வது இன்னிங்சில் களம் இறங்கவில்லை. இந்தப் போட்டி டிராவில் முடிந்தது.

 

ஹெட்டிங்லேயில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் விளையாடவில்லை. இதில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

அதன்பின் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்ற 4-வது டெஸ்டில் களம் இறங்கி 211 மற்றும் 82 ரன்கள் குவித்தார். இவரது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை வகித்ததுடன் ஆஷஸ் கோப்பையை தக்கவைத்தது.

இந்த ஆஷஷ் தொடரில் அசுரன் ஸ்டீவ் ஸ்மித் அடித்த ரன்கள் எத்தனை தெரியுமா? புள்ளிவிவரங்கள் உள்ளே 3
Smith has amassed a whopping 751 runs in just six innings with a highest score of 211 as he helped the Aussies retain the Ashes. Smith has averaged 125.16 bringing to the fore a comparision between him and the legendary Sir Donald Bradman.

தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில் முதல் இன்னிங்சில் 80 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இதுதான் இந்த தொடரில் அவரது குறைந்த பட்ச ஸ்கோராகும். இதனால் 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடி முத்திரை படைத்து புகழோடு தொடரை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 

ஆனால் 23 ரன்கள் ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் ஆஷஸ் தொடரில் தொடர்ச்சியாக அரைசதத்திற்கு மேல் அடித்தது வந்த ஸ்மித்தின் சாதனை முடிவுக்கு வந்தது. ஸ்மித் இந்தத் தொடரில் 7 இன்னிங்சில் 774 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளார். சராசரி 110.57 ஆகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *