இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சளரான நுவான் பிரதீப் பின் தொடை தசை பிடிப்பு காரணாமாக நடந்து கொண்டிருக்கும் இந்தியாவுடனான் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விளகும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. என இலங்கை அணியின் மேளாளர் அசுங்க்கா குருசின்ஹா கிரிக் பஸிற்க்கு தான் கொடுத்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவ்து டெஸ்ட் போட்டி தொடங்கும் முன்னர் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான சுரங்கா லக்மாலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விளகினார் என்பதும் குறிப்பிடதக்கது.
இச்செய்தி முதல் டெஸ்ட்டில் தோல்வி அடைந்திருக்கும் இலங்கை அணிக்கு, அவ்வணியின் இரு சிறந்த வேகபந்து வீச்சாளர்கள் போட்டியில் இருந்து விழகி இருப்பது பெருத்த பின்னடைவை ஏற்ப்படுத்தி உள்ளது. இலங்கை அணிக்கு நல்ல காலம் இல்லை போலும், அதற்கேற்றார் போல் இந்திய அணி மீண்டும் 600+ ரன்களை குவித்துள்ளது, இலங்கைக்கு தலை வலியை ஏற்ப்படுத்தி உள்ளது.
நுவான் பிரதீப் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் பந்து வீசிக்கொண்டிருக்கும் போது தனது பின் தொடை தசை பிடிப்பு காரணமாக கிடைத்த புதிய பந்தில் சரியாக 4 பந்துகளை மட்டுமே வீசிய நிலையில் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
பின்னர் எம்ஆர்ஐ வருடியின் மூலம் கிடைத்த அறிக்கையில் அவர் மேலும் இந்த இரண்டவது போட்டியில் விளையாட மாட்டார் என் அறிவிக்கப்பட்டுள்ளது.
நுவான் பிரதீப்பின் இல்லாமை அணியை எவ்வளவு பாதிக்கும் என் இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமால் அறிவார். மேத்யூசினாலும் பந்து வீச தற்போத் இயலாத நிலையில் இலங்கைகு பெருத்த அடி விழுந்துள்ளது. ஏனெனில் இலங்கைக்காக ஆடி வரும் 11 பேரில் நுவான் பிரதீப் மட்டுமே வேகப்பந்து வீச்சளர் ஆவர், தற்போது சண்டிமால் கைவசம் இருப்பது 3 சுழ்ற்ப்பந்து வீச்சாளர்களும் ,
பகுதி நேர பவுளர்களும் மட்டுமே, முதல் டெஸ்ட் போட்டிடயில் தோற்றிருக்கும் இலங்கைக்கு ஆருதலாக எதுவுமே அமையவில்லை . எரியும் தீயில் எண்ணை ஊரற்றினார் போல ஆல் ரவுண்டர் அஸ்லே குணரத்னாவும் காயம் காரணமாக முன்னரே வெளியேறிய நிலையில், முதல் டெஸ்ட்டில் இலங்கையின் அனுபவம் வாய்ந்த சுழ்ற்ப்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் தனது இடது நடு விரலை காயப்படுத்தி கொண்டார்.
முழு வேகம் கொண்ட இந்தியாவிடம் தற்போது வலிமை இல்லா இலங்கை அணியிடம் மோதி கொண்டிருக்கிறது,
எப்படி சமாளிப்பார் சண்டிமால் மற்றும் அவரது சகாக்கள் என் நாளை வரை பொருத்திருந்து பார்ப்போம்.
தற்போது: 2வது டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்த நுவான் பிரதீப், தொடை காயம் காரணமாக 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். ஆனால், இந்த மொத்த தொடரில் இருந்தே அவர் விலகுவதாக உறுதி செய்ய பட்டது.