இந்திய வீரர் ஒருவர் இங்கிலாந்தில் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.
2005ல் இருந்து இந்தியாவும் உள்ளூர் போட்டிகளில் ஆடிக்கொண்டு இருக்கிறார் ஸ்ரீகாந்த் வாக். முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதானை போன்ற இடது கை சுவிங் பந்து வீச்சு. இடது கை பேட்டிங். கிட்டத்தட்ட அவரை போன்றே ஒரு ஆல் ரவுண்ட் வீரர்.
ஆனால், ரஞ்சி மற்றும் உள்ளூர் தொடர்களில் சாதித்த ஸ்ரீகாந்த் இனிகிய அணிக்காக ஆடவில்லை. தற்போது 29 வயதாகும் அவர் ஐபிஎல் தொடரில் ஆடியுள்ளார்.
2009, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் 2010ஆம் மற்றும் 2011ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்காக ஆடினார். மொத்தம் 9 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளா அவர், 21.36 சராசரியில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி 85 ரன்கள் அடித்துள்ளார்.
ரஞ்சி தொடரில் 63 போட்டிகள் ஆப்பியும் தன்னை நிருபித்து இந்திய அணி வாய்ப்பு கிடைக்காததால், அடுத்தடுத்து வேறு முடிவுகள் எடுத்தார். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிளப் அணிகளுக்காக ஆட துவங்கினார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் பிறந்த இவர் தற்போது இங்கிலாந்தின் வடக்கு யார்க்ஸைர் டிவிஷன் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த டிவிஷன் போட்டிகள் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியதால் நடத்தப்படுவதாகும்.
தற்போது வபாக்கு யார்க்ஸைரில் உள்ள ஸ்டாக்ஸ்லி கிரிக்கெட் கிளப் அணிக்காக ஆடி வருகிறார். கடந்த சனிக்கிழமை மிடில்ஸ்பெர்க் அணிக்கெதிரான போட்டியில் அந்த எதிரணியின் 10 விக்கெட்டுகளைம் வீழ்த்தி அசாத்திய சாதனை புரிந்துள்ளார்.
இதனால் இந்த ஒருநாள் போட்டியில் அவரது அணியான ஸ்டாக்ஸ்லி 135 ரன் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், பேட்டிங்கிலும் அசாத்திய ஸ்ரீகாந்த் 24 பந்துகளுக்கு 41 ரன் விளாசியுள்ளார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
தற்போது கடைக்கு யார்க்ஸைர் லீக்கில் மொத்தம் 33 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதன் சராசரி 11.49 ஆகும்.
தற்போது காயம் காரணமாக தனது விதர்பா அணிக்காக ஆட முடியாமல் உள்ளார் ஸ்ரீகாந்த். கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் விதர்பா அணியின் முன்னணி பந்து வீச்சாளர் இவர் தான். ஒரு 7 வருடத்திற்கு முன்னர் உமேஷ் யாதவ் உடன் கூட்டு சேர்ந்து விதர்மா அணிக்காக இருவரும் அற்புதமாக பந்து வீசி வந்தது குறிப்பிடத்தக்கது.