New Zealand's Ross Taylor (C) and teammate captain Kane Williamson run between the wickets during the 2019 Cricket World Cup first semi-final between India and New Zealand at Old Trafford in Manchester, northwest England, on July 9, 2019. (Photo by Paul ELLIS / AFP) / RESTRICTED TO EDITORIAL USE (Photo credit should read PAUL ELLIS/AFP/Getty Images)

நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் 10 ஓவர்களில் மிகவும் குறைந்தபட்ச ஸ்கோர் அடித்த அணி என்ற தேவையற்ற சாதனைக்கு நியூசிலாந்து அணி சொந்தமாகியுள்ளது.

நடப்பு உலகக் கோப்பையின் முதல் அரை இறுதிப் போட்டி இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே மான்சஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்டில் ஒரு ரன்னில் பும்ரா பந்துவீச்சில் வெளியேறினார்.

பவர்ப்ளேவில் மட்டமான ஆட்டம் : அதிலும் முதலிடம் பிடித்த நியூஸிலாந்து 1
MANCHESTER, ENGLAND – JULY 09: Yuzvendra Chahal(R) and Virat Kohli of India(L) celebrate the wicket of Kane Williamson of New Zealand during the Semi-Final match of the ICC Cricket World Cup 2019 between India and New Zealand at Old Trafford on July 09, 2019 in Manchester, England. (Photo by Stu Forster-IDI/IDI via Getty Images)

 

இதனைத் தொடர்ந்து நிகோலஸ் உடன் ஜோடி சேர்ந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனவே முதல் 10 ஓவர்களில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு வெறும் 27 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது நடப்பு உலகக் கோப்பை தொடரில் எடுக்கப்பட்ட மிகவும் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்பு நடப்பு தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதல் 10 ஓவர்களில் எடுத்த 28 ரன்களே குறைந்த ஸ்கோராக இருந்தது.

பவர்ப்ளேவில் மட்டமான ஆட்டம் : அதிலும் முதலிடம் பிடித்த நியூஸிலாந்து 2

மேலும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்களில் 30 ரன்கள் எடுத்திருந்தது. அதேபோல ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியிலும் நியூசிலாந்து அணி 31 ரன்கள் எடுத்தது. ஆகவே முதல் 10 ஓவர்களில் எடுக்கப்பட்ட 5 குறைவான ஸ்கோர்களில் நியூசிலாந்து அணி 3 முறை வருவது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தப் போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. .

இந்நிலையில் மழை நின்று நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடராத பட்சத்தில் இந்திய அணியின் இலக்கு என்னவாக இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம். இந்திய அணிக்கு டக் வொர்த் லூயிஸ் முறையில் இலக்கு நிர்ணயிக்கப்படும். அதன்படி

ஓவர்கள்    இந்தியாவின் இலக்கு
46                    237
40                    223
35                    209
30                   192
25                   172
20                  148

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஓவர்களின் அளவிற்கு ஏற்ப இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *