ஆடுகளத்தில் எதிரணி வீரர்களை வம்பு பேசுவது நம்மை உற்சாகமாக வைத்திருக்கும் எனவும் நாம் ஆடுகளத்தில் பிஸியாக இருக்கலாம் எனவும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. புஜாரா 193 ரன்களில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 159 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ரிஷப் பந்த் நிகழ்த்தியுள்ள சாதனைகள்:

* குறுகிய காலத்தில் ரிஷப் பந்த் நிகழ்த்தியுள்ள சாதனைகள்

– டெஸ்ட் கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்து தனது முதல் ரன்னை எடுத்த இந்திய வீரர்
– இங்கிலாந்தில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர்
– ஒரு டெஸ்டில் 11 கேட்சுகள் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர்
– ஒரு டெஸ்ட் தொடரில் 20 கேட்சுகள் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர்
– ஆஸ்திரேலியாவில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர்
* வெளிநாடுகளில் இரு சதமடித்துள்ள இந்திய விக்கெட் கீப்பர்
* துணைக்கண்ட விக்கெட் கீப்பர்களில் ஒரு டெஸ்ட் தொடரில் 200 ரன்களும் 20 கேட்சுகளும் பிடித்த முதல் விக்கெட் கீப்பர். மைதானத்தில் வம்பிழுத்து பேசுவது நம்மை உற்சாகமாக வைத்திருக்கும்: ரிஷப் பன்ட்!! 1

* ஆஸ்திரேலியாவில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த். இதற்கு முன்பு 1967-ல் ஃபரூக் என்ஜினியர் அடிலெய்டில் 89 ரன்கள் எடுத்திருந்தார். 2018-ல் இங்கிலாந்தில் முதல் சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்கிற பெருமையைப் பெற்றார் பந்த். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய சேனா (SENA) எனக் குறிப்பிடப்படும் நாடுகளில் டெஸ்ட் சதமடித்த ஒரே இந்திய விக்கெட் கீப்பர் பந்த் மட்டும்தான்.

* ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் சதமடித்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர்கள் – ஜெஃப் டுஜான் (1984), ரிஷப் பந்த் (2018-19).

* இந்திய விக்கெட் கீப்பர் டெஸ்டில் எடுத்துள்ள அதிக ரன்கள்

224 – தோனி  vs ஆஸ்திரேலியா, சென்னை 2013
192 – குந்தேரன் vs இங்கிலாந்து, சென்னை 1964
159* – ரிஷப் பந்த் vs ஆஸ்திரேலியா, சிட்னி 2018

ஆஸ்திரேலியா அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்கள்

டி வில்லியர்ஸ் 169 ரன்கள் – பெர்த் 2012-13
ரிஷப் பந்த் 159* ரன்கள் – சிட்னி 2018-19

7-ம் நிலை மற்றும் அதற்கு கீழான வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவில் எடுத்த ரன்கள்

ரஞ்சித்சிங்ஜி – 175 ரன்கள், சிட்னி 1897.
ரிஷப் பந்த் 159* ரன்கள் – சிட்னி 2018-19மைதானத்தில் வம்பிழுத்து பேசுவது நம்மை உற்சாகமாக வைத்திருக்கும்: ரிஷப் பன்ட்!! 2

* ஆசியாவுக்கு வெளியே டெஸ்ட் சதங்கள்

ரிஷப் பந்த் – 2
தோனி – 0

* ஆசியாவுக்கு வெளியே சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர்கள்

118 ரன்கள் – விஜய் மஞ்ச்ரேக்கர் vs மே.இ., 1959
115 ரன்கள் – அஜய் ராத்ரா vs மே.இ., 2002
104 ரன்கள் – சாஹா vs மே.இ., 2016
114 ரன்கள் – ரிஷப் பந்த் vs இங்கிலாந்து, 2018
159* ரன்கள் – ரிஷப் பந்த் vs ஆஸ்திரேலியா, 2019

* 21 வயதுக்குள் 2 சதங்கள் அடித்துள்ள முதல் விக்கெட் கீப்பர், ரிஷப் பந்த். இரண்டுமே ஆசியாவுக்கு வெளியே எடுக்கப்பட்டவை.

* ரிஷப் பந்தும் ஜடேஜாவும் 7-வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியாவில் 7-வது விக்கெட்டுக்கு எடுத்துள்ள அதிகபட்ச ரன் இது. இந்திய அணிக்கு வெளிநாடுகளில் இது 2-வது பெரிய கூட்டணி. இதற்கு முன்பு, 2002-ல்,  மேற்கிந்தியத் தீவுகளில் விவிஎஸ் லக்‌ஷ்மணும் ராத்ராவும் 7-வது விக்கெட்டுக்கு 217 ரன்கள் எடுத்தார்கள். மைதானத்தில் வம்பிழுத்து பேசுவது நம்மை உற்சாகமாக வைத்திருக்கும்: ரிஷப் பன்ட்!! 3

* ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தொடர்ச்சியாக மூன்று இன்னிங்ஸில் டிக்ளேர் செய்த ஒரே அணி இந்தியா மட்டும்தான். இது இரண்டாவது தடவை. 2008-ல் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இதுபோல தொடர்ச்சியாக மூன்று இன்னிங்ஸில் இந்திய அணி டிக்ளேர் செய்தது.

இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: அதிக  ரன்கள்

புஜாரா – 521 ரன்கள்
ரிஷப் பந்த் – 350 ரன்கள்
விராட் கோலி – 282 ரன்கள்



  • SHARE

    விவரம் காண

    சீனியர் பந்துவீச்சாளர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு !!

    சீனியர் பந்துவீச்சாளர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின்...

    இந்திய அணியை வீழ்த்த இதை செய்ய வேண்டும்; நியூசிலாந்து வீரர்களுக்கு சீனியர் வீரர் அட்வைஸ் !!

    இந்திய அணியை வீழ்த்த இதை செய்ய வேண்டும்; நியூசிலாந்து வீரர்களுக்கு சீனியர் வீரர் அட்வைஸ் உலகத்தரம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மென்களுக்கு எதிராக பந்து வீச்சில்...

    இந்தியா இதை செய்யவிட்டால் உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி !!

    இந்தியா இதை செய்யவிட்டால் உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி பாகிஸ்தானில் இந்த ஆண்டு செப்டம்பரில் நடக்கும் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி...

    அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் நியூசிலாந்து; இரண்டாவது டி.20 போட்டிக்கான அணி அறிவிப்பு !!

    அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் நியூசிலாந்து; இரண்டாவது டி.20 போட்டிக்கான அணி அறிவிப்பு இந்தியா நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நாளை நடைபெற உள்ளது. விராட்கோலி...

    இந்திய அணியின் வெற்றி பயணம் தொடருமா..? நாளை இரண்டாவது டி.20 போட்டி !!

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் போட்டி தொடரில்...