11 வருடங்களுக்கு முன்பு ஜூன் 29ம் தேதி இதே நாளில், ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்களைக் கடந்து சச்சின் டெண்டுல்கர் உலகச் சாதனை படைத்தார்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக கருதப்படும் சச்சின்
டெண்டுல்கர் 11 வருடங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் 15,000 ரன்களைக் கடந்து உலகச் சாதனைப் படைத்தார். பெல்ஃபாஸ்ட் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் 93 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு
வழிவகுத்தார்.
யாரும் எளிதில் தொட முடியாத பல உலகச் சாதனைகளைப் படைத்திருக்கும் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் ரசிகர்களால் ‘கடவுள்’ என்றே அழைக்கப்படுபவர். ஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்து உலகச் சாதனை படைத்த முதல் வீரரும்
டெண்டுல்கர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர்
மொத்தம் 18, 426 ரன்கள் அடித்துள்ளார்
மேலும் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாரத ரத்னாவிருது வென்ற முதல் விளையாட்டு வீரரும் டெண்டுல்கரே ஆவார்.
#OnThisDay in 2007, @sachin_rt became the first, and so far only player to pass 15,000 ODI runs with 93 against South Africa in Belfast! pic.twitter.com/kaoH1yUmr2
— ICC (@ICC) June 29, 2018