ஐதராபாத்தில் நடக்கும் 21-ஆம் லீக் ஆட்டத்தில் டெல்லிக்கு எதிராக டாஸை வென்று பேட்டிங் செய்ய முடிவெடுத்தது சன் ரைசர்ஸ் ஐதராபாத்.
டாஸின் போது:
டேவிட் வார்னர் – நாங்கள் பேட்டிங் ஆடப்போகிறோம். நாங்கள் நல்ல இலக்கை தருவோம். இரண்டு மாற்றங்களை செய்திருக்கிறோம். நபிக்கு பதிலாக வில்லியம்சன் மற்றும் சரணுக்கு பதிலாக சிராஜ்.
ஜாஹீர் கான் – ஒரே ஒரு மாற்றம். ஜெயந்த் யாதவ் உள்ளே வந்துள்ளார். நாங்கள் பல போட்டிகளில், நெருங்கி வந்து தோல்வி அடைந்தோம். இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.
அணிகள் விவரம்:
சன் ரைசர்ஸ் ஐதராபாத் – டேவிட் வார்னர், ஷிகர் தவான், மொய்சஸ் ஹென்றிக்ஸ், யுவராஜ் சிங்க், நமன் ஓஜா, தீபக் ஹூடா, கேன் வில்லியம்சன், ரஷீத் கான், புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், சித்தார்த் கவுல்.
டெல்லி டேர்டெவில்ஸ் – சாம் பில்லிங்ஸ், சஞ்சு சாம்சன், ஸ்ரயேஸ் ஐயர், கருண் நாயர், ரிஷப் பண்ட், ஏஞ்சலோ மத்தியூஸ், கிறிஸ் மோரிஸ், பேட் கம்மின்ஸ், அமித் மிஸ்ரா,ஜெயந்த் யாதவ், ஜாஹீர் கான்.