உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று பர்மிங்காமில் நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 338 ரன்கள் எடுத்தால், இந்தியா வெற்றி பெறும் என்ற இலக்கினை இங்கிலாந்து அணி நிர்ணயித்தது. இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது.
இறுதியில், இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழந்து 306 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த தோல்வி குறித்து பல்வேறு தரப்பினரும் வெவ்வேறு காரணங்களை கூறி இந்திய அணியை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி, இந்திய அணி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘இப்படி கூறுவது எனது மூடநம்பிக்கை என்றே கூறுங்கள்.
ஆனால், இந்திய அணி உலக கோப்பையில் தோல்வி அடைய காரணம் புதிய ஜெர்சிதான்’ என பதிவிட்டுள்ளார். இந்த டுவிட்டிற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Call me superstitious but I’d say it’s the jersey that ended India’s winning streak in the #ICCWorldCup2019.
— Mehbooba Mufti (@MehboobaMufti) June 30, 2019
இந்நிலையில் இந்தத் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி,“இந்தப் போட்டியில் டாஸ் மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது. அத்துடன் ஒருபுறம் பவுண்டரியின் அளவு மிகவும் குறைவாக இருந்தது. அதாவது வெறும் 59 மீட்டர் தூரம் மட்டுமே இருந்தது. எனவே இந்தச் சிறிய பவுண்டரியில் ரிவர்ஸ் ஸ்வீப் மற்றும் ஸ்வீப் போன்ற ஷாட்களால் சிக்சர் அடித்தால் சுழற்பந்துவீச்சாளரால் என்ன செய்ய முடியும்.

அத்துடன் ஹர்திக் மற்றும் ரிஷப் பண்ட் விளையாடியபோது எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி இலக்கை நோக்கி அழைத்துச் சென்றனர். எனினும் அவர்கள் அவுட் ஆன பிறகு சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது” எனத் தெரிவித்தார்.