உலகின் எந்த மைதானத்திலும் எங்களது பந்து வீச்சு யூனிட் அற்புதமாக பந்துவீசும் என இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் பேசியுள்ளார்
.இதுகுறித்து அவர் கூறியதாவது…
தற்போது இங்கிலாந்தில் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது நாங்கள் முன்னரே பெரிதாக ஏதும் பேச விரும்பவில்லை. ஆனால் எங்களது வேகப்பந்து வீச்சு யூனிட் உலகின் எந்த மைதானத்திலும் பேசு,ம் அந்த அளவிற்கு எங்களுக்கு வல்லமை உள்ளது என்று கூறியுள்ளார் அவர்.

50 ஓவர் உலகக் கோப்பை தொடர் வரும் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் இரு முறை சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது.இந்நிலையில் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தரமான வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் குறைவாக இருப்பதாக கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காம்பீர் கூறுகையில், “என்னை பொறுத்தவரையில் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கூடுதலாக ஒரு தரமான வேகப்பந்து வீச்சாளர் இல்லை என்றே உணர்கிறேன்.
பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு கூடுதல் ஆதரவு தேவை. இரு வேகப் பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகியோர் அணியில் இருப்பதாக நீங்கள் வாதிடலாம். ஆனால் நான் நம்பவில்லை. அணிச்சேர்க்கை அமைப்பதில் சரியாக செயல்பட வேண்டும்.
இம்முறை உலகக் கோப்பையில் அனைத்து அணிகளும் ஒருவரையொருவர் எதிர்த்து விளையாடுவதால் வலுவான போட்டி கொண்ட தொடராக இருக்கும்.
இந்த வடிவம் தான் உண்மையான உலக சாம்பியனை கொடுக்கும். வருங்காலத்திலும் இதேபோன்ற வடிவிலேயே அனைத்து உலகக் கோப்பை தொடர்களையும் நடத்துவதில் ஐசிசி கண்டிப்பு காட்ட வேண்டும். இந்தியா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய 4 அணிகளும் கவனிக்கப்பட கூடியதாக இருக்கும்’’ என்றார். – பிடிஐ