Cricket, India, Australia, David Warner
ஆஷஸ் தொடர் முடிந்ததையொட்டி தற்போது ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று சிட்னியில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றி 3-0 என முன்னிலையில் உள்ளது.

ஆஸி-நியூஸி-இங்கிலாந்து முத்தரப்பு டி20 தொடர் : ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு, வார்னர் கேப்டன்!! 1
England batsman Jos Buttler jumps for joy as he reaches his century during the third one-day international (ODI) cricket match between England and Australia in Sydney on January 21, 2018. / AFP PHOTO / Glenn Nicholls / IMAGE RESTRICTED TO EDITORIAL USE – STRICTLY NO COMMERCIAL USE (Photo credit should read GLENN NICHOLLS/AFP/Getty Images)

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த உடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற இருக்கிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.India, Australia, Cricket

இந்தத் தொடர் முடிந்த உடன் ஆஸ்திரேலியா தென்ஆப்பிரிக்கா சென்று நானகு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக டி20 தொடரில் இருந்து ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. வாரனர் (கேப்டன்), 2. ஆரோன் பிஞ்ச் (துணைக் கேப்டன்), 3. அஷ்டோன் அகர், 4. அலெக்ஸ் கேரே, 5. பென் வார்சுயிஸ், 6. டிராவிஸ் ஹெட், 7. கிறிஸ் லின், 8. கிளென் மேக்ஸ்வெல், 9. கேன் ரிச்சார்ட்சன், 10.  டி’ஆர்சி ஷார்ட், 11. பில்லி ஸ்டான்லேக், 12. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 13. அன்ரிவ் டை, 14. ஆடம் சம்பா. 

தொடர் அட்டவணை :

  1. பிப்ரவரி 3-ந்தேதி – ஆஸ்திரேலியா – நியூசிலாந்து
  2. பிப்ரவரி 7-ந்தேதி – ஆஸ்திரேலியா – இங்கிலாந்து
  3. பிப்ரவரி 10-ந்தேதி – ஆஸ்திரேலியா – இங்கிலாந்து
  4. பிப்ரவரி 14-ந்தேதி – நியூசிலாந்து – இங்கிலாந்து
  5. பிப்ரவரி 16-ந்தேதி – நியூசிலாந்து – ஆஸ்திரேலியா
  6. பிப்ரவரி 18-ந்தேதி – நியூசிலாந்து – இங்கிலாந்து
  7. பிப்ரவரி 21-ந்தேதி – இறுதிப் போட்டி

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *