நியுசிலாந்து டெஸ்ட்: வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் விலகல்!! 1

தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது அப்பாஸ் 3-வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.  நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்- காயத்தால் முகமது அப்பாஸ் விலகல் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது அப்பாஸ் 3-வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது.நியுசிலாந்து டெஸ்ட்: வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் விலகல்!! 2

3-வது போட்டியில் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக முகமது அப்பாஸ் திகழ்ந்து வருகிறார். இவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மூன்று முதல் நான்கு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் கடைசி டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். ஆனால் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இடம்பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமது அப்பாஸிற்குப் பதிலாக சமீப காலமாக ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் சிறப்பாக பந்து வீசும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியுசிலாந்து டெஸ்ட்: வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் விலகல்!! 3
Pakistan’s bowler Shaheen Shah Afridi (2R) celebrates with teammates including captain Sarfraz Nawaz (2L) after taking a wicket during the fifth T20 cricket match between Pakistan and Australia of a T20 tri-series including host nation Zimbabwe at The Harare Sports Club in Harare on July 5, 2018. / AFP PHOTO / Jekesai NJIKIZANA

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் யாசிர் ஷா மீண்டும் ‘சுழலில்’ அசத்த பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐக்கிய அரபு எமிரேட்சில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் அபுதாபியில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 418 (டிக்ளேர்), நியூசிலாந்து 90 ரன்கள் எடுத்தன. ‘பாலோ ஆன்’ பெற்ற நியூசிலாந்து அணி, மூன்றாம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில், 2 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. லதாம் (44), ராஸ் டெய்லர் (49) அவுட்டாகாமல் இருந்தனர்.

நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. லதாம் (50), ராஸ் டெய்லர் (82) அரை சதம் அடித்தனர். யாசிர் ஷா சுழலில்’ வாட்லிங் (27) சிக்கினார். ஹசன் அலி ‘வேகத்தில்’ கிராண்ட்ஹோம் (14) ஆட்டமிழந்தார். வாக்னரை (10) வெளியேற்றிய யாசிர் ஷா, ஐந்தாவது விக்கெட்டை சாய்த்தார். முடிவில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 312 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக யாசிர் ஷா 6 விக்கெட் வீழ்த்தினார்.

இதன் மூலம், ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் தொடர் சமநிலையை எட்டியது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் டிசம்பர் 3ல் அபுதாபியில் துவங்குகிறது.

Rajeshwaran Naveen

Cricket Fan - Dhoni Lover - CSK Forever

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *