இப்படி ஒரு மட்டமான ஆடுகளத்தை நான் எங்குமே பார்த்தது இல்லை; முன்னாள் வீரர் நாசிர் ஹூசைன் சாடல்
பாகிஸ்தான் மைதானத்தை போல் என் வாழ்நாளில் ஒரு மைதானத்தை கண்டதில்லை என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் விமர்சித்துள்ளார்.
17 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது, இந்தத் தொடரின் முதல் போட்டியிலிருந்து பாகிஸ்தான் அணியை வதம் செய்த இங்கிலாந்து அணி 3-0 என முற்றிலுமாக தொடரை கைப்பற்றியது.
பாகிஸ்தான் அணி விளையாடி பழகிய தன்னுடைய சொந்த மைதானத்திலேயே இங்கிலாந்து அணியை ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியை தழுவியது, பாகிஸ்தான் ரசிகர்கள் உட்பட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பந்து வீச்சுக்கு சுத்தமாக ஒத்துழைக்காத பாகிஸ்தான் மைதானம் ஐசிசியால் அபராத புள்ளிகளை பெற்றுள்ளது, அந்த அளவிற்கு மைதானம் மிகவும் மோசமாக இருந்தும், இங்கிலாந்து அணி அந்த மைதானத்தில் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றியை தழுவியது உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு பாராட்டை தெரிவித்தும், பாகிஸ்தான் அணியை விமர்சித்தும். மேலும் பாகிஸ்தான் மைதானத்தை கிண்டல் செய்தும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், பாகிஸ்தான் மைதானம் போன்று பிளாட்டாக இருக்கும் ஒரு மைதானத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை என்று தெரிவித்திருந்தார்.மேலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு தன்னுடைய பாராட்டுகளையும் தெரிவித்திருக்கிறார்.
அதில்,“பாகிஸ்தான் மைதானத்தை போன்று பிளாட்டான மைதானத்தை இதுவரை நான் கண்டதில்லை. குறிப்பாக கராச்சி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்க இல்லை, இந்த மைதானம் எந்த ஒரு முயற்சிக்கும் ஒத்துழைக்கவில்லை ஆனால் இங்கிலாந்து அணி இதில் எதிரணியின் மீது அதிக நெருக்கடியை ஏற்படுத்தி மூன்று போட்டிகளிலும் முழு விக்கெட்களை வீழ்த்தி அசத்தியது. இங்கிலாந்து அணி இந்த விக்கெட்டில் போதுமான ரன்களை எடுத்துவிட்டு எதிரணியின் வீரர்களின் விக்கெட்டை பொறுமையாக எடுத்துள்ளது பாராட்டிற்குரியது.
இந்த மைதானத்தில் பென் ஸ்டோக்ஸை தவிர்த்து வேறு ஒரு கேப்டன் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் இந்த தொடரில் பென் ஸ்டோக்ஸ் அருமையாக செயல்பட்டார், நிச்சயம் எதிர்வரும் தொடரிலும் இதேபோன்று செயல்படுவார். குறிப்பாக கராச்சியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இல்லாமலே வெற்றி பெற்றுள்ளனர் இதன் மூலம் இங்கிலாந்து அணியின் பேக்கப் வீரர்களின் பலம் என்ன என்பதை அறிந்து கொள்ள முடிகிறது” என நாசர் ஹுசைன் தெரிவித்திருந்தது குறிபபிடத்தக்கது.