மீண்டும் அணியில் இணைந்தார் நட்சத்திர வீரர்! கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு! ரசிகர்கள் ஜாலி! 1

உலக கோப்பை தொடர் வரும் 30ம் தேதி முதல் இங்கிலாந்தில் துவங்க உள்ளது இதற்காக. முன்னர் அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அணியில் முதலில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமீர் சேர்க்கப்படவில்லை .தற்போது அவர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளன.

சின்னம்மை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீரை உலகக் கோப்பைக்கான அணியில் சேர்த்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

இங்கிலாந்துக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கிவிட்டனர். பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஒவ்வொருவரும் சராசரியாக 8 ரன்களுக்கு மேல் கொடுத்து விக்கெட் வீழ்த்தத் தெரியாமல் விழிபிதுங்கினர். குறிப்பாக, பேர்ஸ்டோ, பட்லர், ஜேஸன் ராய், மோர்கன் ஆகியோரை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

இதனால், வேறுவழியின்றி, பந்துவீச்சை பலப்படுத்தும் நோக்கில், மிகுந்த ஆக்ரோஷமான, ஆவேசமான பந்துவீச்சாளரான முகமது அமீர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.Cricket, India, pakistan, Virat Kohli, Mohammad Amir

பந்துவீச்சில் ‘மேட்ச் வின்னர்’ என்று சொல்லப்படும் முகமது அமிர், பல்வேறு போட்டிகளில் பாகிஸ்தானுக்கு தனது பந்துவீச்ச மூலம் வெற்றி தேடிக்கொடுத்துள்ளார். ஆனால், அவரைக் உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யாமல், உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பாக இங்கிலாந்துடன் ஒருநாள் தொடருக்கு மட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்திருந்தது.

உண்மையில் பந்துவீச்சில் விக்கெட் வீழ்த்தும் ஃபார்ம் இன்றி முகமது அமீர் தவித்துவந்ததால், உலகக் கோப்பைக்கான அணியில் அமீர் சேர்க்கப்படவில்லை. ஆனால், பாகிஸ்தான் அணியில் உள்ள பந்துவீச்சாளர்கள் மோசமாக பந்துவீசி வருவதால், முகமது அமீரின் சேவை தேவை எனக் கருதி அவரை அணியில் சேர்த்துள்ளது நிர்வாகம்.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ” சின்னம்மையால் அவதிப்படும் முகமது அமீர், லண்டனில் சிகிச்சை பெற்றுவருவார். உலகக் கோப்பைப் போட்டி தொடங்கும் முன் அவர் உடல் நலம் தேறிவிடுவார் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது, பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தரும் நம்புகிறார்கள். தேர்வுக்குழுத் தலைவர் இன்ஜமாம் உல் ஹக்கும் இதற்கு ஒப்புதல் தெரிவித்துவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் அணியில் இணைந்தார் நட்சத்திர வீரர்! கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு! ரசிகர்கள் ஜாலி! 2

இதற்கிடையே முகமது அமீரின் உடல்தகுதி குறித்த மருத்துவர்களின் அறிக்கையை பயிற்சியாளர் ஆர்த்தரும், கேப்டன் அகமதுவும் எதிர்பார்த்துள்ளனர். இன்னும் 2 வாரங்களில் அமீர் உடல்நலம் தேறிவிடுவார் என்று மருத்துவர்கள் அறிக்கை அளித்தால், தலைமை தேர்வாளர், அணி நிர்வாகக்குழு ஆகியவை முறைப்படியான அனுமதியை வழங்கிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல பேட்ஸ்மேன் ஆசிப் அலியும் முதலில் உலகக் கோப்பைக்கான அணியில் சேர்க்கப்படாமல் இப்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இவரின் பேட்டிங் திறமையையும், பேட்டிங் ஃபார்மையும் அணி நிர்வாகம் தொடர்ந்து கவனித்து வருகிறது.

2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை முதல் 6 ஓவர்களுக்குள் சீர்குலைத்து வெற்றியை எளிமையாக்கியவர் முகமது அமிர் என்பது அனைவருக்கும் நினைவிருக்கும்.மீண்டும் அணியில் இணைந்தார் நட்சத்திர வீரர்! கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு! ரசிகர்கள் ஜாலி! 3

இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் சேர்த்தது. 339 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அமிர் தனது வேகப்பந்துவீச்சில் அதிர்ச்சி அளித்தார். ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். அதன்பின் வந்த பேட்ஸ்மேன்களும் சொதப்பியதால் இந்திய அணி 30.3 ஓவர்களில் 158 ரன்களுக்கு ஆட்டமிழந்து கோப்பையை பறிகொடுத்தது.

இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்த முகமது அமிர் அதன்பின் சர்வதேச போட்டிகளில் மிகவும் பிரபலமானார். இவரின் பந்துவீச்சு மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறியது. இதனால் அணியில் தவிர்க்க முடியாத வீரராக அமிர் மாறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *