3rd June 2019, Trent Bridge, Nottingham, England; ICC World Cup Cricket, England versus Pakistan; Pakistan celebrate the fall of the third England wicket after England captain Eoin Morgan is bowled by Mohammad Hafeez of Pakistan (Photo by Alan Martin/Action Plus via Getty Images)

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி தனது கிளவுஸில் ராணுவ முத்திரையை பயன்படுதியதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் வீரர்கள் முடிவு செய்துள்ளார்.

இந்திய அணியின் ஒவ்வொரு விக்கெட்எடுக்கும் போதும் வித்தியாசமாக கொண்டாடவும் திட்டமிட்டுள்ளார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவுத்தாம்டன் நகரில் கடந்த 5-ம் தேதி இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான லீக் ஆட்டம் நடந்தது. அப்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் கையில் அணிந்திருந்த கிளவுஸில் ராணுவத்தில் ஒரு பிரிவான பலிதான் ரெஜிமென்டின் முத்திரையைக் கையுறையில் அணிந்திருந்தார்.

தோனி கையுறையில் பலிதான் முத்திரை படம் நேற்று சமூக ஊடகங்களிலும் வைரலானது.ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் ஒருநாட்டின் ராணுவ முத்திரையைப் பதித்து விளையாடுவதை ஐசிசி விரும்பவில்லை.

தோனிக்கு பதிலடி கொடுக்க திட்டம் தீட்டும் பாக். வீரர்கள்: வெளியான அதிர்ச்சி செய்தி 1

 

உடனடியாக தோனியின் கிளவுஸில் இருக்கும் முத்திரையை நீக்குமாறு பிசிசிஐ அமைப்புக்கும், தோனிக்கும் ஐசிசி அறிவுரை வழங்கியது.

இதேபோல புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் ராணுவத் தொப்பி அணிந்து இந்திய அணியினர் விளையாடினார்கள். அந்த போட்டி ராணுவத்தினரின் நலநிதிக்காகவும் ஐசிசி அனுமதியுடன் நடத்தப்பட்டது.

ராணுவத் தொப்பி அணிந்து இந்திய வீரர்கள் போட்டியில் பங்கேற்றது குறித்தும் அப்போது பாகிஸ்தான் ஐசிசியிடம் புகார் தெரிவித்திருந்தது. ஆனால், அதை ஐசிசி நிராகரித்துவிட்டது. இப்போது தோனியின் கிளவுஸில் பலிதான்முத்திரை படம் இருப்பதையும் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளது.

இந்த சூழலில் தோனிக்கு பதிலடிகொடுக்கும்வகையிலும், இந்திய அணியினரை பழிவாங்கும் வகையில் பாகிஸ்தான் அணியினர் திட்டமிட்டுள்ளார்கள். வரும்  16-ம் தேதி மான்செஸ்டரில் நடக்கும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஆட்டமிழக்கும் போது அதை வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்துள்ளார்கள் ஆனால், அதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது.

தோனிக்கு பதிலடி கொடுக்க திட்டம் தீட்டும் பாக். வீரர்கள்: வெளியான அதிர்ச்சி செய்தி 2

 

 

இது குறித்து பாக் பேஷன் எனும் இணையதளத்தின் ஆசிரியர் சஜ் சித்திக் கூறுகையில், ” தோனி கிளவுஸில் முத்திரை பதித்தது, ராணுவத் தொப்பி அணிந்து கோலி தலைமையிலான இந்திய அணி விளையாடியது ஆகியவற்றுக்கு பதிலடி தர பாகிஸ்தான் அணி திட்டமிட்டது. கேப்டன் சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியினர், வரும் 16-ம் தேதி இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி இழக்கும் ஒவ்வொரு விக்கெட்டையும் வித்தியாசமாகக் கொண்டாட முடிவு செய்தார்கள்.

இதுகுறித்து கிரிக்கெட் வாரியத்திடமும் சர்பிராஸ் அகமது அனுமதி கோரியுள்ளார். ஆனால், இதைக் கேட்ட வாரியம் அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

தோனிக்கு பதிலடி கொடுக்க திட்டம் தீட்டும் பாக். வீரர்கள்: வெளியான அதிர்ச்சி செய்தி 3

 

பாகிஸ்தான் வாரியத் தலைவர் இஷான் மானி, மற்ற நாடுகள் என்னவேண்டுமானாலும் செய்யலாம் நாம் செய்யக்கூடாது. கடந்த 2016-ம் ஆண்டில் மிஸ்பா உல் ஹக் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்து “புஷ் அப்” எடுத்து ராணுவத்துக்கு மரியாதை செலுத்தினார். ஆனால், எதிரணியின் விக்கெட்டை வீழ்த்திவிட்டு நாம் கொண்டாடுவது வேறு” எனத் தெரிவித்துவிட்டார்.

இதற்கிடையே பாகிஸ்தான் அணியினர் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கச் செல்லும் முன் பிரதமர் இம்ரான் கான் கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்தியபின் எந்தவிதமான கிறுக்குத்தனமான செயல்களையும் செய்யக்கூடாது, நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *