கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வங்காளதேசம் கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வங்காளதேச கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வங்காளதேச கிரிக்கெட் அணி வரும் 29-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்க அந்நாட்டுக்குச் செல்ல திட்டமிட்டு இருந்தது.
அதேபோல், ஏப்ரல் 5-ம் தேதி இரு அணிகளும் பங்கேற்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி ராவல் பிண்டியில் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தத் தொடரை காலவரையின்றி ஒத்திவைக்க இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்துள்ளன.
ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வருகிற 24-ந்தேதி தொடங்க இருந்து உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான பாகிஸ்தான் கோப்பை ஒருநாள் தொடரை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.
மோர்தசா இடத்தை நிரப்புவது கடினம் என்று வங்காளதேசம் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.
வங்காளதேசம் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மோர்தசா. கடந்த வாரம் இவர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தமிம் இக்பால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மோர்தசா இடத்தை நிரப்புவது கடினம் என்று தமிம் இக்பால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிம் இக்பால் கூறுகையில் ‘‘மோர்தசா உடன் நெருங்கிய தொடர் இருந்ததால் நான் அதிர்ஷ்டசாலி. அவரை அருகில் இருந்து பார்த்த நான், இணைந்து ஏராளமான போட்டிகளில் விளையாடிள்ளோம்.
மோர்தசா எப்படி சிந்திப்பார். முடிந்த வரை அவரிடம் இருந்து அதை எப்படி பெற்றுக் கொள்வது என்பது குறித்து எனக்குத் தெரியும். ஆனால், அவரது இடத்தை நிரப்புவது மிகக்கடினம். அவரிடம் இருந்து நேர்மையான கருத்துக்களை எடுத்துக் கொள்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் திணறினால், ஆலோசனை கேட்கும் முதல் நபர் அவராகத்தான் இருப்பார்’’ என்றார்.