பாகிஸ்தானின் அடுத்த சுற்றுப்பயணம்

சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற உற்ச்சாகத்தில் உள்ள பாகிஸ்தான் அணி , விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சர்ஃபராஸ் அஹமது வின் கேப்டன்சிப்பில் அந்த அணி சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி அதன் அடுத்த பயணத்திற்க்கு தயாராகி வருகிறது. அந்த அணி வீரர்கள் அடுத்த ஆண்டு (2018) நியுசிலாந்து நாட்டிற்க்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக விளையாட உள்ளது. டெஸ்ட் தவிர மற்ற போட்டிகளில் (ஒரு நாள் மற்றும் டி20) விளையாட உள்ளது.

 

அந்த அட்டவணையானது கீழே வகுக்க பட்டுள்ளது :

பாகிஸ்தான் அணி நியுசிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிளும் ,
3 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளிலும் விளையாட உள்ளது.

இந்த சுற்று பயணம் ஆனது ,அடுத்த ஆண்டு சனவரி மாதம் 6 ஆம் தேதி நியுசிலாந்து நாட்டில் உள்ள வெல்லிங்க்டனின் பேசின் ரிசர்வ் மைதானத்தில் துவங்க உள்ளது.
கடைசி ஒரு நாள் போடியும் சனவரி 19 ஆம் தேதி இதே மைதானத்தில் தான் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

டி20 போட்டிகள் சனவரி 22 ஆம் தேதி, வெல்லிங்க்டனில் உள்ள  வ்வெஸ்ட்பேக் மைதானத்தில் துவங்க உள்ளது. இறுதி ட்20 போட்டி சிரிது நாட்கள் கழித்து தருங்காவில் உள்ள பே ஓவலில்  சனவரி 28 ஆம் தேதி நடை பெற உள்ளது.

முன்னதாக , சாம்பியன்ஸ் கோப்பை தொடர் துவங்கும் முன் பாகிஸ்தான் அணியை விமர்சகர்கள் கத்து குட்டியணி என் விமர்சித்ததும், ஆனால் அந்த அணி அனைவரையும் வாயடைக்க செய்யும் வகையில் 8 அணிகல் கொண்ட சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

நம் பரம எதிரியான பாகிஸ்தான் நம்மை தான் சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் வென்றதும் நமக்கு மறக்க முடியாத ஒன்றாகும். இந்தியாவை அந்த இறுதி போட்டியில் 180 ரங்கள் வித்யாசத்தில் வென்றதன் மூலம் 8வது இடத்தில் இருந்த கத்து குட்டி என் அழைக்க பட்ட அந்த அணி 6 வது இடத்திற்க்கு முன்னேறியதுடன் கோப்பையயும் தட்டி சென்றது.

அந்த அணியின் முன்னாள் கேப்டன்  அசார் அலி சாம்பியன்ஸ் கோப்பை ஆரம்பிப்பதற்க்கு முன்னர் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார், அதனை தொடர்ந்து பாகிஸ்தானின் விக்கெட் கீபர் பேட்ஸ்மேன் சர்ஃபராஸ் அஹமது கேப்டனாக நியமிக்கப்பட்டார். பின்னர் விராத் கோஎலி தலைமையிலான இந்திய அணியும் சர்ஃபராஸ் தலைமையிலான பாக்ஸ்தான் அணியும் முதல் லீக் போட்டியில் மோதியது ,அதில் இந்தியாவே வெற்றி பெற்றது .

பின்னர் ஒரு அற்புதம் நிகழ்ந்ததை போல பாகிஸ்தான் அணி இறுதி போட்டி வரை வந்து கோப்பையையும் தட்டி சென்றது இந்திய அணியிடம் இருந்து.அப்படி ஒரு பலமான இளம் அணியாக நியுசிலாந்தில் சுற்று பயணம் செய்ய உள்ளது.

 

ADELAIDE, AUSTRALIA – JANUARY 26: Azhar Ali of Pakistanlooks on prior to game five of the One Day International series between Australia and Pakistan at Adelaide Oval on January 26, 2017 in Adelaide, Australia. (Photo by Daniel Kalisz – CA/Cricket Australia/Getty Images)

கடைசியாக இந்த இரு அணிகலும் சந்தித்தது போது நியுசிலாந்து அணியே 2 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரயும் ,இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

கராச்சி மாநிலத்திலிருந்து வந்த சர்ஃபராஸ் அகமதுவிற்க்கு தற்போது 30 வயதாகிறது. தனது துவக்க போட்டியயை 2007 ஆம் ஆண்டு இந்தியாவிற்க்கு எதிராக ஜெய்ப்பூரில் ஆடிய அவர், இதுவரை 75 ஒரு நாள் போட்டியிளும் 36 டெஸ்ட் மற்றும், 29 டி20 போட்டிகளும் பாகிஸ்தானுக்காக ஆடியுள்ளார்.

ஆக்ரோசமாக ஆடக்க்கூடிய அவர் டெஸ்ட் போட்டியில் 40.96 சராசரியுடன் 2089 ரன் மற்றும் ஒரு நாள் போட்டியில் 1664 ரன்களும் டி20 போட்டியில் 359 ரன்களும் சேர்த்துள்ளார்.

ஆட்த்து வரும் தொடர்களிலும் அந்த அணி நன்றாக ஆடும் என் நம்புவோம்.

Editor:

This website uses cookies.