இந்திய பெண்ணை மனந்த பாகிஸ்தான் சர்ச்சை வீரர்!! 1

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, இந்திய பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலர் இந்திய பெண்களை திருமணம் செய்துள்ளனர். சோயிப் மாலிக் பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவை திருமணம் செய்து கொண்டார். அதேபோல், முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் ஜாஹிர் அப்பாஸ் மற்றும் மொசின் ஹாசன் கான் ஆகியோரும் இந்திய பெண்களை திருமணம் முடித்து இருந்தனர்.

அந்த வரிசையில், மற்றொரு பாகிஸ்தான் வீரர் இந்திய பெண்ணை திருமணம் செய்துள்ளார். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, ஷமியா அர்ஸு என்ற இந்திய பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

இந்திய பெண்ணை மனந்த பாகிஸ்தான் சர்ச்சை வீரர்!! 2
Ali got a reply from Indian tennis star Sania Mirza, who is married to his colleague Shoaib Malik. “Congratulations Hassan. Wish you both a lifetime of love and happiness …This time you’ll have to treat us to more than Nandos though,” Sania said in a tweet.

ஏற்கனவே இந்தத் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை, ஹசன் அலியும் உறுதி செய்திருந்தார். இருவருக்கும் இடையிலான திருமண நிகழ்ச்சிகள் துபாயில் நேற்று நடைபெற்றுள்ளது.

இந்தத் திருமணத்திற்கு பாகிஸ்தான் மற்றும் இந்திய வீரர்களுக்கு ஹசன் அலி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இந்திய வீரர்கள் யாரும் அதில் கலந்து கொள்ளவில்லை. பாகிஸ்தான் தரப்பிலும் ஷதாப் கான் மட்டுமே இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சி முகாமில் உள்ளனர்.

ஷமியா அர்ஸு ஹரியானாவின் மேவாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பி.டெக் ஏரோனாடிகல்ஸ் படித்த ஷமியா ஜெட் ஏர்வேஸில் பணிபுரிந்தார். தற்போது, எமிரேட் ஏர்லைன்ஸ்-ல் இஞ்சினியராக பணியாற்றி வருகிறார்.

இந்திய பெண்ணை மனந்த பாகிஸ்தான் சர்ச்சை வீரர்!! 3
As reported earlier, Shamia, 26, is from Haryana. She is a flight engineer with Emirates Airlines, while her family members are settled in New Delhi.

அசன் அலியின் திருமணத்துக்கு இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவின், ஹைதராபாத்தைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவை, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மோதல் அதிகரித்து வரும் சூழலில் பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஹசன் அலி, இந்திய பெண் ஷமியாவை திருமணம் செய்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *