அப்பாவிற்க்கு கார் பரிசளித்த பாண்டியா பாய்ஸ்

ஹர்திக் பாண்டியா மற்றும் குர்னால் பாண்டியா சகோதர்ரகள் தங்களது தந்தைக்கு ஹிமான்சு பாண்டியாவிற்க்கு புதிய கார் ஒன்றை பரிசளித்து அவரை அசத்தியுள்ளனர். தனது தந்தை ஹிமான்சு பாண்டியாவை மும்பையில் இருந்த ஒரு கார் ஷோருமிற்கு அழைத்துச் சென்றார் குருனால் பாண்டியா. தற்போது இலங்கையில் உள்ள ஹர்திக் பாண்டிய வீடியோ கால் மூலம் தந்தைக்கு காரை தேர்வு செய்து கொடுத்தார்.

மணம் நெகிழ்ந்த தந்தை ஹிமான்சு மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீரில் மிதந்தார்.

தனது தந்தைக்கு கார் வாங்கி கொடுத்த பின்பு ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஹர்த்திக் பாண்டிய தனது மணம் நெகிழ்ந்து தந்தையின் அற்பணிப்பை பாராட்டி பதிவிட்டார்.

“இவர் தான் நாங்கள் இப்படி ஒரு நிலைமையை அடைய காரணாம்”

“இவரது கண்கள் மகிழ்ச்சியில் மிதப்பதை பார்ர்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது”

“இந்த மகிழ்ச்சி அனைத்தும் அவருக்கே உரித்தானதாகும்”

“இவர் தான் எங்களுக்குகாக அவரது அனைத்து சந்தோசங்களையும் விடுத்து வாழ்ந்தார்”

“அவரே எங்களது தந்தை”

“எங்களுக்கு வாழக்கையை கொடுத்த அவருக்கு நாங்கள் என்ன செய்தாலும் அது ஈடாகாது”

 

முதல் டெஸ்ட் போட்டியில் தனது டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான ஹர்திக் பாண்ட்யா ,தனது முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னின்சுலேயே அதிரடியாக அரை சதம் கடந்தார். பந்து வீச்சிலும் கலக்கிய அவர் சுழ்ற்ப்பந்து வீச்சுக்கு சாதகமான கொலும்பு ஆடுகளத்தில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.பாண்ட்ய தான் 3வது டெஸ்ட் இன் ஆட்ட நாயகன் ஆவார்.

பந்து வீச்சிலும் அசத்தியுள்ளார் பாண்ட்யா. தனது பங்கிற்க்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இத்தனைக்கும் அவர் 3 டெஸ்ட் போட்டியிலும் சேர்த்து 32 ஒவர்கள் மட்டுமே வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 போட்டிகளில் விளையாடியுள்ள பாண்ட்யா, 108 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 59.3 சராசரியிலும் 178 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஒர் சதம் மற்றும் ஒரு அரை சதம் அடங்கும்

Editor:

This website uses cookies.