உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளம் அதிகரிக்கவேண்டும் என பார்திவ் பட்டேல் கேட்டுக்கொண்டார்

தான் பாதுகாப்பகதான் இருக்கிறோம் என உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் நினைக்கும் படி, போதியமான தொகையை பெற வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கையிட்டார் பார்திவ் பட்டேல்.

“ஊதியத்தை அதிகப்படுத்த வேண்டும், ஆனால் எவ்வுளவு என்று என்னால் சொல்ல முடியாது. ஒரு ஐபில் தொடரில் 20 அல்லது 30 லட்சம் வரை பெறும் ரஞ்சி டிராபி வீரர்கள் போல் பெறவேண்டும். ரஞ்சி டிராபி மட்டும் விளையாடுபவர்கள், அதே தொகையை பெறவேண்டும். அப்போதுதான், பல போட்டிகளில் சிறப்பாக விளையாடவேண்டும் என ஊக்கம் வரும். மாநில வீரர்களையும் ஒப்பந்தம் செய்தால் நன்றாக இருக்கும்,” என பார்திவ் பட்டேல் கூறினார்.

உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும் என ஹர்பஜன் சிங்கும் கேட்டுக்கொண்டார். முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கு கடிதமும் எழுதினார். இதை பற்றி கூட்டம் போட்டி பிசிசிஐ, இதை கூடிய விரைவில் நிறைவேற்றுவோம் என கூறினார்கள்.

மற்ற சங்கங்களை போன்று, உள்ளூர் வீரர்களை பிசிசிஐ ஒப்பந்தம் செய்வதில்லை. சர்வதேச வீரர்களுக்கும் மாநில வீரர்களுக்கும் இதுதான் வித்தியாசம்.

வருகின்ற ரஞ்சி டிராபி தொடர் சொந்த மண்ணிலும் மற்றும் எதிரணியின் மண்ணிலும் விளையாடவேண்டும் என பார்திவ் பட்டேல் மேலும் கேட்டு கொண்டார்.

“ஒரு சீசனில் நடுநிலை இடங்களில் விளையாடுவது பிரச்சனை இல்லை; நாங்கள் முதல் முறை கோப்பையை வென்றுவிட்டோம். சொந்த மண்ணிலும் மற்றும் எதிரணியின் மண்ணிலும் விளையாடினால் தான் பரபரப்பாக இருக்கும்.

28 அணிகள் பங்கேற்கும் ரஞ்சி தொடர், 4 பிரிவாக பிரிந்து, ஒவ்வொரு அணியும் 6 போட்டிகளில் விளையாடும். 83வது ரஞ்சி டிராபி சீசன் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்குகிறது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.