இந்தியக் கேப்டன் மகேந்திர சின் தோனியின் கிரிக்கெட் மதிப்பு எவ்வளவு என்று நம் அனைவரும் அறிந்த ஒன்றே. சமீபத்தில் இந்தியா-ஆஸ்திரேலியத் தொடரிந் ஒரு போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடந்தது. அப்போது தோனி இந்திய வீரர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப்சை அழைத்து தனது வீட்டில் வைத்து விருந்து வைத்துள்ளர் தோனி.
அந்த வீட்டில் அப்படி என்ன சிறப்பசம் என்னவென்றால் வீடே சிறப்பம்சம் போல் தான் இருக்கிறது. தோனி இதுநாள் காலம் வரை ராஞ்சியில் ஹர்மு ஹௌசிங்கில் 3மாடி கொண்ட வீட்டில் குடி இருந்து வந்தார். கடந்த ஆண்டு இதே சமயம் தோனி அந்த வீட்டைக் கட்ட கடைக்கால் நாட்டினார்.
சிலமாதங்களுக்கு முன்னர் அந்த அழகிய பிரமாண்டமான வீடு கட்டி முடிக்கப்பட்டது. அந்த வீட்டின் பெயர் கைலாசபதி என வைத்துள்ளார் தோனி.
இந்த வீட்டின் சிறப்புகள் நிறைய இருக்கிறது. இந்த வீட்டில் ஒரு உள்ளரங்க மைதானம், ஸ்விமிங் பூல், ஒரு வலைபயிற்சி மையம் மற்றும் லேட்டெஸ்ட் வெர்சன் ஜிம் என அனைத்தும் உள்ளது. மேலும், தோனியின் பைக் கலெக்சனை பாதுகாக்க அல்ட்ரா மார்டன் பைக் கெராஜ் உள்ளது. இந்த வீட்டின் மதிப்பு மட்டும் கிட்டதட்ட 90கோடி ரூபாய்கள் ஆகும்.
அந்த சொகுசான வீட்டின் படங்களை தற்போது பார்ப்போம்