உ.பி யில் இருந்து குஜராத் : பியூஷ் சாவ்லா 1

கடந்த பன்னிரெண்டு வருடங்களாக ரஞ்சி கோப்பை, தியோதர் கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் உத்திரபிரதேச அணிக்காகக ஆடி வந்த பியூஸ் சாவ்லா தற்போது தன்னுடைய அணியயை மாற்றிக்கொள்வதில் ஆர்வமாக உள்ளதாக தெரிகிறது. பியூஸ் சாவ்லா இந்திய கிர்க்கெட் அணிக்காக தனது மிக இளம் வயதிலேயே அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உ.பி யில் இருந்து குஜராத் : பியூஷ் சாவ்லா 2

இந்தியாவிற்காக 17 வயதிலேயே அறிமுகமானார் அவர். முன்னரே அறிமுகமானாலும் 2006ல் இருந்து 2013 வரை இந்தியாவிற்காக வெரும் 3 டெஸ்ட் போட்டிகளே ஆடியுள்ளார். அதனில் 7 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இந்திய முதல் தர போட்டிகள் 100 ஆடியுள்ள அவர் 386 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

வலது கை லெக் ஸ்பின்னர் ஆன அவர் கடந்த ஆண்டு உத்திரபிரதேச அணிக்காக வெஉம் இரண்டு ரஞ்சி கோப்பை போட்டிகலே ஆடினார், அதிலும் வெருமனே 2 விக்கெட்டுகளாய் மட்டுமே வீழ்த்தி இருந்தார் என்பதும் அணி மாற்றத்திற்க்கான காரணங்களாக இருக்கலாம். மேலும் 27 வயதே ஆன இவர் இந்திய அணியில் இடம் பிடிக்கும் முயற்ச்சியில் உள்ளார். மேலும்,

உ.பி யில் இருந்து குஜராத் : பியூஷ் சாவ்லா 3

இந்தியாவின் மேற்க்கு பகுதிகளில் உள்ள ஆடுகளங்கள் சுழற்ப்பந்து வீச்சிற்க்கு சாதகமான ஆடுகளங்காக இருப்பதும் இவர் குஜராத் அணியை தேர்வு செய்ய காரணமாகும்.

 குஜராத் அணி பெரும்பாலும் சூரத் மற்றும் வலசத் மைதானங்களில் தான் தனது ரஞ்சி கோப்பை ஆட்டங்களை ஆடும். அங்கு நன்றாக செயல்பட்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியில் இடம் பிடிக்கவும் இம்முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

நான் பர்திவ் படேலிடம் (குஜராத் கேப்டன்) இது குறிட்து பேசினேன். குஜராத்திற்க்காக ஆடும் என் விருப்பத்தையும் தெரிவித்தேன். ஆனல் உத்திரபிரதேச அணியை விட்டு செல்வதற்க்கு பெரிய  காரணங்கள் எதுவும் இல்லை. என்னுடைய விருப்பங்களை உத்திரபிரதேச கிரிக்கெட் சங்கத்திடம் தெரிவித்தேன். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்.                                

– பியூஸ் சாவ்லா

மேலும் உத்திர பிரதேச அணியில் குல்தீப் யாதவின் வருகைக்குப் பின் , பியூஸ் சாவ்லாவிற்க்கு பந்து வீச்சில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அவரால்  மேலும் அணியில் முன்னனி பந்து வீச்சளராக வலம் வருவது கடினம்.

உ.பி யில் இருந்து குஜராத் : பியூஷ் சாவ்லா 4

ஒரு வீரராக புதிய அணிக்காக ஆடுவதில் எனக்கு ஆர்வம் மிகிதியாக உள்ளது. மட்டுமில்லாமல், குஜராத் அணி கடந்த மூன்று வருடங்களில் 3 கோப்பயை வென்றுள்ளது மேலும் ஆர்வத்தை தூண்டுகிறது. உத்திரபிரதேச அனியில் எனக்கு எந்த பிரச்சைனையும் இல்லை ஆனால் ஏதொ ஒன்று அங்கு விடுபடுகிறது. – பியூஸ் சாவ்லா

 

இதற்க்கு முன்னரும்  இரண்டு வருடத்திற்க்கு முன்னர் உத்திரபிரதேச அணியில் இருந்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் குஜராத் அணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவருடன் குஜராத் அணியில் இணைந்து விளையாட போகிறார். பியூஸ் சாவ்லா இந்திய அணி 2011ல் உலககோப்பை வென்றதில் சில முக்கிய பந்து வகித்த சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *