10 வருடமாக ஐபில் தொடர் நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் இந்த ஊழல், பிக்சிங், சட்டவிரோதமான பந்தயங்களுக்கு ஓயவில்லை. 2013-இல் நடந்த சட்டவிரோதமான பந்தயத்திற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை 2 ஆண்டுகள் தடை செய்தது பிசிசிஐ.
இந்த சூதாட்டத்தால் 3 கிரிக்கெட் வீரர்களை கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதித்தது பிசிசிஐ. அவர்கள் மூவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் – ஸ்ரீசாந்த், அன்கிட் சவாண் மற்றும் அஜித் சண்டிலா.
இந்த ஐபில்-இல் அனைத்து போட்டிகளும் எதிர்பாராத படி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், ட்விட்டரில் ஒருவர் இந்த ஐபில்-இல் என்ன நடக்கும் என அப்படியே பதிவிட்டிருந்தார். அன்றிலிருந்து அதை போலவே நடந்து கொண்டு வருகிறது.
மே 3-ஆம் தேதி ட்விட்டரில் உதை ஷெட்டி என்னும் பெயரில் தன்னுடைய கணிப்பை பதிவிட்டிருந்தார்.
ஐதராபாத், மும்பை, கொல்கத்தா மற்றும் புனே அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெரும். அதில் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் பிளே-ஆப் சுற்று போட்டிகளில் தோற்று ஐபிஎல்-லை விட்டு வெளியேறும், இறுதி போட்டியில் புனே அணியுடன் மும்பை அணி விளையாடும் என பதிவிட்டிருந்தார்.
ஆனால் அவர் சொன்னதை போலவே நடக்கிறது. ஐதராபாத் அணியை கொல்கத்தா வீழ்த்தியது, கொல்கத்தாவை மும்பை வீழ்த்தியது, நம்பமுடியாத போட்டிகள் ஆகும். அத்துடன், புனே அணி தான் இந்த வருட ஐபில் கோப்பையை வெல்லும் என பதிவிட்டிருந்தார். அதுமட்டும் இல்லாமல், கடைசியில் FIXIT என்னும் வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்.
இதற்கு முன்னாள், வாழ்வா சாவா போட்டியில் புனே மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும். அந்த போட்டியில் புனே அணி வெற்றி பெற்று பிளே-ஆப்க்கு தகுதி பெரும் எனவும் கூறியிருந்தார். அதை போலவே பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாட, புனே அணி வெற்றி பெற்றது.
அதை போலவே, நேற்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெறும் என கூறினார். அதை போலவே மும்பை அணியும் வெற்றி பெற்றது.
கான்பூரில் குஜராத் லயன்ஸ் வீரர்கள் தங்கியிருந்த அதே ஓட்டலில் மூன்று நபரை கைது செய்தது போலீஸ். இந்த ட்விட்டர் நபரை பற்றி போலீஸ் விசாரிக்கும் என தெரிகிறது.