தான் கேப்டனாக பொருப்பேற்றதில் இருந்து தன் தலைமைப் பண்பையும் அடுத்த தலைமுறை வீரர்களையும் மெருகேற்றி வளர்த்தும் வந்தார். 2007 உலகக் கோப்பையில் இருந்து பல வீரர்களை தன் தலைமையில் உருவாக்கி அவர்களுக்கு அடுத்தடுத்து பல் வாய்ப்புகளைக் கொடுத்து தற்போது அவர்கள் சர்வதேச தரமிக்க வீரர்களாக கிரிக்கெட் உலகில் தங்களை நிலை நாட்டியுள்ளனர். தற்போது தங்களது கிரிக்கெட் வாழ்கையின் வெற்றிக்கு தோனி தான் உதவினார் எனக் குறிப்பிட்ட 11 வீரர்களின் பட்டியலைக் காண்போம்.
1.ரவிச்சந்திரன் அஸ்வின்

இந்திய அணியின் முன்னனி சுழற்பந்து வீச்சாளர். ஹர்பஜன் மற்றும் கும்ளே ஆகியோர் தங்களது ஸ்திரத்தன்மையை இழக்க. தோனியால் அஸ்வின் இந்திய அணிக்கு கொண்டு வரப்பட்டார். தோனியின் சென்னை அணியில் இருந்த அஸ்வின் பின்னர் இந்தியா அனிக்கு செல்ல காரனம் தோனி தான். 2011/12 ஆம் ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த போது பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் அசத்திய அஸ்வின், தொடரின் முடிவில் கூறியதாவது, தோனி என்னை மைதானத்திலேயே இறந்துவிடச் சொன்னாலும் நான் அதனை செய்வேன் எனக் கூறினார் அஸ்வின்.