டோனியுடன் இணைந்து விளையாடுவது ஸ்பெஷலாக இருக்கும் என இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இடம்பிடித்துள்ள வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.
இந்தியா – இலங்கை இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 18 வயதே ஆன சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார்.
இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வாஷிங்டன் சுந்தர், டோனியுடன் இணைந்து விளையாடுவது சிறப்பானதாக இருக்கும் என வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.
Photo by Shaun Roy – Sportzpics – IPL
இதுகுறித்து வாஷிங்டன் சுந்தர் கூறுகையில் ‘‘எந்தவொரு கிரிக்கெட் வீரரும் டோனியுடன் இணைந்து விளையாட கட்டாயம் விரும்புவார்கள். ஐ.பி.எல். தொடரில் அவருடன் சில போட்டிகளில் நான் விளையாடியுள்ளேன். ஆனால், அவருடன் இணைந்து இந்திய அணிக்காக விளையாடுவது மாறுபட்டது. மிகவும் சிறப்பானதாக இருக்கும். இதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.
அவர் எப்போதும் பந்து வீச்சாளர்கள், தங்களது வேலையை சுலபமாக்க உதவியாக இருப்பார். இந்த வேலையை எனக்காகவும் செய்வார். அவர் இந்திய அணியில் இருக்கும்போது, நான் அணியில் இடம்பிடித்தது மிகவும் சந்தோசமாக இருக்கிறது’’ என்றார்.