ஒரு அணியாக செயல்பட்டதால் வெற்றி பெற்றோம் என ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை குவித்தது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜெய்ப்பூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஹைதராபாத் தரப்பில் கேப்டன் கேன் வில்லியம்ஸன்-டேவிட் வார்னர் தொடக்க வீரர்களாக களமிறங்கி, அதிரடியா ஆடினர். எனினும் கேன் வில்லியம்ஸன் 13 ரன்களோடு ஷிரேயஸ் கோபால் பந்தில் போல்டானார்.
பின்னர் மணிஷ் பாண்டே-வார்னர் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். 10-ஆவது ஓவர் நிறைவில் 86 ரன்களை எடுத்திருந்தது ஹைதராபாத்.
மணிஷ் பாண்டே 14-ஆவது அரைசதம்: மணிஷ் பாண்டே தனது 14-ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார். 25 பந்துகளில் அவர் 50 ரன்களை கடந்தார்.
மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த வார்னர் 37 ரன்களுடன், ஓஷேன் தாமஸ் பந்தில், ஸ்மித்திடம் கேட்ச் தந்து அவுட்டானார்.
விக்கெட்டுகள் சரிவு: 9 பவுண்டரியுடன் 36 பந்துகளில் 61 ரன்களை விளாசி அவுட்டானார் பாண்டே. அவரைத் தொடர்ந்து விஜய் சங்கர் 8, ரித்திமன் சாஹா 5, ஷகிப் அல் ஹசன் 9, புவனேஸ்வர் குமார் 1 ரன்னுக்கும், தீபக் ஹூடா ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.
37 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்தது ஹைதராபாத்.
20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்தது ஹைதராபாத்.
ரஷித் கான் 17 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
ராஜஸ்தான் தரப்பில் வருண் ஆரோன் 2-36, ஓஷேன் தாமஸ் 2-28, ஷிரேயஸ் கோபால் 2-30, உனதிகட் 2-26 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
ராஜஸ்தான் அணியில் இங்கிலாந்து வீரர்கள் ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தங்கள் நாட்டு உலகக் கோப்பை போட்டி பயிற்சி முகாமில் பங்கேற்க திரும்பி விட்டனர். இது ராஜஸ்தான் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஹைதராபாத் அணியில் அதிரடி வீரர் ஜானிபேர்ஸ்டோவும் நாடு திரும்பி விட்டார்.
சாம்சன் மற்றும் ஸ்மித் இருவரும் ஜோடி சேர்ந்து தங்களது அணியின் வெற்றிக்கு மிகவும் உதவும் வகையில் ரன்களை குவிக்க துவங்கினர். ஆனால் இந்த ஜோடியை அஹமது பந்து வீச்சில் 16.6 ஓவரில் பிரிக்க முடிந்தது. அப்போது ஸ்மித் 22 (16) ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்பு களம் இறங்கிய ஆஷ்டன் டர்னர் மற்றும் சாம்சன் ஜோடி சேர்ந்து ரன்களை குவிக்க தொடங்கினர்.
இறுதியில் ஆட்டத்தின் 19.1 ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது