ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நேபாளம், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, யுஏஇ அணிகள் சேர்ப்பு
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நேபாளம், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, யுஏஇ அணிகள் சேர்ப்பு
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டிற்கான தரவரிசையில் நேபாளம், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, யுஏஇ அணிகள் இடம்பிடித்துள்ளனர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் அணிகளின் வெற்றித் தோல்வியை கணக்கிட்டு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டிற்கான வீரர்கள் மற்றும் அணிகளின் தரவரிசையை வெளியிடும்.
ஏற்கனவே இந்த தரவரிசையில் 12 அணிகள் இடம்பிடித்திருந்தன. தற்போது அது விரிவாக்கம் செய்யப்பட்டு 12-ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலக கிரிக்கெட் லீக் சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்ற 13 அணிகளில் வெற்றி வாகை சூடிய நெதர்லாந்து ஒருநாள் போட்டிக்கான அந்தஸ்தை பெற்றது.

ஐசிசியின் கிரிக்கெட் உலகக் கோப்பை குவாலிபையர் 2018 தொடரில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஸ்காட்காந்து, நேபாளம், யுஏஇ அணிகளும் ஒருநாள் தொடரில் விளையாடும் அந்தஸ்தை பெற்றுள்ளது.
இன்று முதல் இந்த நான்கு அணிகளும் ஒருநாள் தரவரிசையில் இடம்பிடித்துள்ளது. ஸ்காட்லாந்து 28 புள்ளிகளுடன் 13-வது இடத்தில் உள்ளது. 18 புள்ளிகளுடன் யுஏஇ 14-வது இடத்தில் உள்ளது. நெதர்லாந்து 15-வது இடத்திலும் உள்ளது.
இந்த 4 அணிகள் சேர்க்கப்பட்டிருப்பதால் இவற்றுடன் ஆடும் ஒருநாள் போட்டிகளும் இனி தரவரிசைப் புள்ளிகள் கணக்கீட்டில் சேர்த்து கொள்ளப்படும்.

கடந்த ஆண்டு ஐசிசி உலக கிரிக்கெட் லீக் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றதன் மூலம் நெதர்லாந்து அணி ஒருநாள் அந்தஸ்து பெற்றது.
ஸ்காட்லாந்து அணி 28 புள்ளிகளுடன் 13வது இடத்திலும், யு.ஏ.இ. 18 புள்ளிகளுடன் 14ம் இடத்திலும் உள்ளன.
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் உள்ள அணிகள் வருமாறு:
1. இங்கிலாந்து (125 புள்ளிகள்)
2. இந்தியா (122)
3. தென் ஆப்பிரிக்கா (113)
4. நியூஸிலாந்து (112)
5. ஆஸ்திரேலியா (104)
6. பாகிஸ்தான் (102)
7. வங்கதேசம் (93)
8. இலங்கை (77)
9. மே.இ.தீவுகள் (69)
10. ஆப்கான் (63)
11. ஜிம்பாப்வே (55)
12. அயர்லாந்து (38)
13. ஸ்காட்லாந்து (28)
14. யு.ஏ.இ. (18)