ரிசப் பன்ட் மற்றும் கார்த்திக் இருவருமே தேர்வாகாமல் போகலாம் என சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
’ஆறு வருடத்துக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் மீண்டும் பங்கேற்கிறேன்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
12-வது ஐபிஎல் டி20 தொடர் வரும் 23 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆறு வருடத்துக்கு முன், புனே அணியில் இடம் பிடித்திருந்தார் கங்குலி. அதற்கு பிறகு இப்போது ஐபிஎல்-லுக்கு மீண்டும் வந்துள்ளார்.
இதுபற்றி கங்குலி கூறும்போது, ‘டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அங்கம் வகிக்க இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் இருக்கிறார். அவருக்கு ஆலோசனைகளையும் உதவியும் வழங்குவேன். டெல்லி அணியுடன் இன்று இணை கிறேன். இதற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்தில் வகித்து வந்த தொழில்நுட்பக் குழு பதவியில் இருந்து சில நாட்களுக்கு முன் விலகி விட்டே ன். ஆறு வருடத்துக்கு பின் ஐபிஎல்-லில் இணைவது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சேர்மன் பார்த் ஜிண்டால் கூறும்போது, ‘’கங்குலி எங்கள் அணியில் இணைந்திருப்பது பெருமையான விஷயம். ‘உலக கிரிக்கெட்டில் அதிக புத்திக்கூர்மை கொண்டவர்களில் கங்குலியும் ஒருவர். இந்திய கிரிக்கெட்டில் இன்று காணப்படும் ஆக்ரோ ஷம், அவர் மூலம்தான் வந்தது. அவரது அனுபவத்தின் மூலம் எங்கள் அணி ஆதாயம் பெறும்’ என்று தெரிவித்தார்.
இங்கிலாந்தில் மே மாதம் 30-ந்தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்கான 10 அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. இந்திய அணி கடந்த இரண்டு மூன்று வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
ஆனால் உலகக்கோப்பை தொடருக்கு முந்தைய கடைசி தொடரில் ஆஸ்திரேயாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடர 2-3 எனத் இந்தியா தோல்வியடைந்தது. இந்த தோல்விக்குப்பின் இந்திய அணியில் இன்னும் 4-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்ய சரியான பேட்ஸ்மேன் இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்துள்ளது.
இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடும் புஜாராவை, நான்காவது இடத்தில் களம் இறக்கலாம் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறுகையில் ‘‘நான் ஒரு கருத்து கூற இருக்கிறேன். என்னுடைய கருத்து சிலருக்கு நம்ப முடியாத வகையில் இருக்கால், ஏராளமானவர்களுக்கு சிரிப்பைக் கூட தரலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் புஜாரா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4-வது இடத்தில் களமிறக்க வேண்டும்.
புஜாராவின் பீல்டிங் சற்று பலவீனமாக இருக்கலாம். ஆனால் அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்னும் என்னுடைய அபிப்ராயம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், இதற்கு முன் இந்திய அணி முயற்சித்துப் பார்த்த இதர பேட்ஸ்மேன்களை விட இவர் சிறந்தவர் என்பது எனது கருத்து’’ என்றார்.