சர்வதேச போட்டிகளின் போது இந்திய வீரர்கள் கடைபிடிக்க வேண்டி 6 வழிமுறைகளை வெளியிட்டது பிசிசிஐ! 1

தென்ஆப்பிரிக்கா தொடரின்போது கொரோனா வைரஸ் தொற்றாமல் இருக்க வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நாளை நடக்கிறது. கொரோனா வைரஸ் பீதி இருப்பதால் போட்டி நடைபெறுமா? வீரர்கள் வைரஸ் தொற்றாமல் தப்பித்துக் கொள்வார்களா? ரசிகர்கள் அதிக அளவில் கூடுவதால் யாருக்காவது வைரஸ் தொற்று ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது? போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் பிசிசிஐ இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘‘அணியின் மெடிக்கல் குழு கொரோனா வைரஸின் தற்போதைய நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. உலக சுகாதார மையம் அறிவித்துள்ள வழிமுறைகள் குறித்து வீரர்கள், அணியின் சப்போர்ட் ஸ்டாஃப், மாநில சங்கங்களுடன் கலந்துரையாடி உள்ளோம்.

சர்வதேச போட்டிகளின் போது இந்திய வீரர்கள் கடைபிடிக்க வேண்டி 6 வழிமுறைகளை வெளியிட்டது பிசிசிஐ! 2
India’s Shikhar Dhawan and teammates look to catch a ball during a practice session in Dharmsala, India, Wednesday, March 11, 2020. India and South Africa will play their first one-day international cricket match on Thursday in Dharmsala. (AP Photo/Ashwini Bhatia)

மேலும், வீரர்கள் எதை செய்ய வேண்டும்?. எதை செய்ய கூடாது? என்பது குறித்த வழிமுறையை தெரிவித்துள்ளார்’’ என்று தெரிவித்துள்ளது.

வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:-

1. சோப்பு மற்றும் தண்ணீரால் கையை குறைந்தது 20 நொடிகள் கழுவ வேண்டும்.

2. கையை சுத்தம் செய்யும் திரவத்தை பயன்படுத்த வேண்டும்.

3. தும்மல் மற்றும் இருமலின்போது வாயை மறைத்துக் கொள்ள வேண்டும்.

4. காய்ச்சல், இருமல் அல்லது ஏதாவது உடல்நலக்குறைவு இருந்தால் மெடிக்கல் குழுவுக்க உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.சர்வதேச போட்டிகளின் போது இந்திய வீரர்கள் கடைபிடிக்க வேண்டி 6 வழிமுறைகளை வெளியிட்டது பிசிசிஐ! 3

5. கையை கழுவும் முன்பு முகம், வாய், மூக்கு ஆகியவற்றை தொடுவதை தவிர்க்க வேண்டும்.

6. அணிக்கு வெளியே தனிப்பட்ட ஒருவருடன் நெருக்கமாக அமர்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும். கை குலுக்கல், தெரியாதவர்களின் போன்களை செல்பி எடுப்பதற்காக தொடுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் மாநில சங்கங்களை மிகவும் தயார் நிலையில் இருக்கும்படி வலியுறுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *