இந்தியா – தென் ஆப்ரிக்கா கடைசி டெஸ்ட் போட்டி… கணிக்கப்பட்ட இந்திய அணி !!

இந்தியா தென் ஆப்ரிக்கா கடைசி டெஸ்ட் போட்டி… கணிக்கப்பட்ட இந்திய அணி

தென் அப்ரிக்கா சென்று மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி, முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்து தொடரை இழந்துவிட்ட நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை(24.1.18) ஜோஹன்ஸ்பெர்க்கில் துவங்க உள்ளது.

முக்கியத்துவம் இல்லாத இந்த போட்டியில் கிரிக்கெட் வல்லுநர்களால் கணிக்கப்பட்ட இந்திய அணியின் ஆலும் லெவனை இங்கு பார்ப்போம்.

1., கே.எல் ராகுல்;

முதல் போட்டியில் சொதப்பிய தவானுக்கு பதிலாக இரண்டாவது போட்டியில் களமிறங்கிய கே.எல் ராகுல் இரண்டாவது போட்டியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாட விட்டாலும் மூன்றாவது போட்டியிலும் இவரே இந்திய அணிக்கு விளையாடுவார் என்று தெரிகிறது.

2., முரளி விஜய்;       

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் குவித்த முரளி விஜய்யே மூன்றாவது போட்டியில் களமிறங்குவார். மேலும் இவருக்கு மாற்றாக வேறு வீரர் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

3., கோஹ்லி;

2010ம் ஆண்டு முதல் இந்திய அணியில் பட்டையை கிளப்பி வரும்  விராட் கோலி தற்போது தென்னாப்பிரிக்க மண்ணில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் தன்னை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விராட். இவருக்கு மாற்று வீரர் யாருமே இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.

4., புஜாரா;

இந்திய அணியின் தூணாக இருக்க வேண்டியவர். தற்போது முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் தென்னாப்பிரிக்க மண்ணில் தடுமாறி உள்ளார். சென்ற முறை இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்றபோது இரண்டு அரை சதம் அடித்திருந்தார்.

5., ரஹானே ;

முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணியின் படுதோல்விக்கு ரஹானே போன்ற வெளிநாட்டு மண்ணில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாததே காரணம் என்று முன்னாள் வீரர்கள் பலர் கூறி வருகின்றனர். இதனை தற்போது இந்திய அணியும் உணர்ந்துள்ளதால் மூன்றாவது போட்டியில் ரஹானே களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இவருக்கு பதிலாக ரோஹித் சர்மா அணியில் இருந்து எடுக்கப்படலாம்.

6., ஹர்திக் பாண்டியா;

தென் ஆப்ரிக்கா அணியுடனான முதல் போட்டியில் 93 ரன்கள் அடித்து இந்திய அணியின் மானத்தை காப்பாற்றிய ஹர்திக் பாண்டியா, மூன்றாவது போட்டியிலும் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுனையாக இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

7., அஸ்வின்;

ஆல் ரவுண்டரான அஸ்வின் முதல் இரண்டு போட்டியிலும் தென் ஆப்ரிக்கா அணிக்கு பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் தொல்லை கொடுத்ததால் இவரும் மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் தொடருவார்.

8., தினேஷ் கார்த்திக் ;

தென் ஆப்ரிக்கா அணியுடனான முதல் போட்டியில் காயம் அடைந்து சஹாவால் இரண்டாவது போட்டியில் விளையாட முடியாததால் அவருக்கு பதிலாக இரண்டாவது போட்டியில் களமிறக்கப்பட்ட பார்தீவ் பட்டேல், பேட்டிங்கில் சிறப்பாக செயல்படாததை இந்திய அணி ஒருவேளை ஏற்றுக்கொண்டாலும், விக்கெட் கீப்பிங்கில் சொதப்பியதை நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது என்பதால் மூன்றாவது போட்டியில் தினேஷ் கார்த்திக்கே விக்கெட் கீப்பராக களமிறக்கப்படுவார். மேலும் சையத முஸ்தாக் அலி தொடரில் விளையாடி கொண்டிருந்த இவருக்கு பி.சி.சி.ஐ அவசர அழைப்பு விடுத்து தென் ஆப்ரிக்க வர வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

9., முகமது ஷமி ;

முதல் இரண்டு போட்டியிலும் பவுலிங்கில் மிரட்டிய ஷமியை அணியில் இருந்து இந்திய அணி நிச்சயம் யோசிக்காது.

10., பும்ராஹ்;

முதல் இரண்டு போட்டியிலும் ஓரளவு சிறப்பாகவே பந்துவீசிய பும்ராஹ் மூன்றாவது போட்டியிலும் தொடர அதிக வாய்ப்புகள் உள்ளன. அதே வேளையில் புவனேஷ்வர் குமார் அணிக்கு திரும்பும் பட்சத்தில் பும்ராஹ் வெளியேற்றப்படவும் வாய்ப்பு உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

11., இஷாந்த் சர்மா

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் மொத்தம் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இஷாந்த் சர்மா மூன்றாவது போட்டியிலும் நிச்சயம் தொடருவார்.

 

Mohamed:

This website uses cookies.