மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வியை சிரித்து கொண்டாடிய ப்ரீத்தி ஜிந்தா
ப்ளே ஆஃப் சுற்றுக்கு பஞ்சாப் முன்னேறாத நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியும் செல்லாதது மகிழ்ச்சி அளிப்பதாக பிரீத்தி ஜிந்தா கூறுவது போன்ற காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னையுடனான போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியுற்றதால் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. இதனால் அந்த அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா கவலையில் இருந்தார். ஒரு கட்டத்தில் சோகத்தில் இருந்து மீண்ட பிரீத்தி ஜிந்தா, தனது அணி பிளே ஆஃபுக்கு முன்னேறாத நிலையில், மும்பையும் செல்லாதது மகிழ்ச்சி என்று கூறிள்ளார்.

பஞ்சாப் அணியின் நிர்வாகி ஒருவருடன் பிரித்தி ஜிந்தா பேசும் இந்த காட்சியில் ஆடியோ இல்லை என்றாலும், அவரது உதட்டசைவை வைத்து பார்க்கையில், மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாததால் தாம் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக அவர் கூறுவது போல் உள்ளது.
Did #PreityZinta just say “I am just very happy that Mumbai is not going to the finals..Really happy” ? #CSKvKXIP #MIvsDD #IPL #IPL2018 pic.twitter.com/KWaxSUZYZh
— Jo (@jogtweets) May 20, 2018
இந்த வீடியோவை மைதானத்தில் இருந்த யாரோ ஒருவர் படம்பிடித்து சமூக வலைதளங்களில் கசிய விட அது சமூக வலைதளங்களில் நேற்றில்ல் இருந்து தீயாக பரவி வருகிறது.