ஐபில் 2018, போட்டி 1 : மும்பை vs சென்னை – முன்னோட்டம்

என்ன?

ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கும் 11வது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. ஐபில் வரலாற்றில் இரண்டு அணிகளுமே பலம் வாய்ந்த அணி என்பதால், இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

கடந்த வருடம் நடந்த ஐபில் தொடரை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி நம்பிக்கையுடன் இருக்க, இரண்டு வருடம் கழித்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் புது அணியுடன் களமிறங்குகிறது. கடந்த ஐந்து தொடர்களின் முதல் போட்டியில் தோல்வி பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த முறை அந்த மோசமான சாதனையை அகற்ற காத்திருக்கிறது.

எப்போது? 

ஏப்ரல் 7, 2018 – இந்திய நேரடி இரவு 8 மணி

எங்கு? 

வான்கடே மைதானம், மும்பை

மும்பை இந்தியன்ஸ்: 

கடந்த வருடம் கோப்பையை தட்டி சென்றதால், மும்பை அணி நம்பிக்கையுடனே களமிறங்கும். மேலும், இந்த முறை சில அதிரடி வீரர்களுடன் அட்டகாச பந்துவீச்சாளர்களையும் வாங்கியுள்ளது மும்பை. எவின் லெவிஸ், இஷான் கிஷான் ஆகியோர் தொடக்கத்தில் அடித்து விளையாட, ரோகித் சர்மா, பொல்லார்ட், பாண்டியா ஆகியோர் நடுவரிசையில் இறங்கி அவர்களின் சுயரூபத்தை காட்டுவார்கள்.

பந்துவீச்சில் பாண்டியா சகோதரர்கள், ஜேஸ்ப்ரிட் பும்ரா, முஷ்டபிஸுர் ரஹ்மான் ஆகியோர் எதிரணியின் வீரர்களை சின்னாபின்னம் ஆக்குவார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

இரண்டு வருடம் கழித்து மீண்டும் ஐபில் தொடருக்கு திரும்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புதிய முகங்களுடன் களமிறங்கும். தென்னாபிரிக்கா அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ்க்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால், இன்றைய போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம்.

மேலும், சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. வாட்சன், பிராவோ, ஜடேஜா ஆகியோர் தலா நான்கு ஓவர்கள் வீசுவது உறுதி. வெளிநாட்டு வீரர்களில் எந்த நான்கு வீரர்களை தேர்வு செய்ய போகிறார்கள் என்பது தான் கேள்வி.

நேருக்கு நேர்: 

இதுவரை இரண்டு அணிகளும் மோதியுள்ள 22 போட்டிகளில், மும்பை அணி 12 போட்டிகளிலும், சென்னை அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதுவரை வான்கடே மைதானத்தில் இரண்டு அணிகளும் 7 போட்டிகளில் மோதியுள்ளது, அதில் மும்பை அணி 5 போட்டிகளிலும், சென்னை அணி 2 போட்டிகளிலும் வெற்றி  பெற்றுள்ளது. எனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியின் கை ஓங்கியுள்ளது.

எதிர்பார்க்கும் அணி: 

மும்பை – எவின் லெவிஸ், இஷான் கிஷான், ரோகித் சர்மா, ஜேபி டுமினி, சூரியகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டியா, கிரண் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, முஷ்டபிஸுர் ரஹ்மான், ஜேஸ்ப்ரிட் பும்ரா, ராகுல் சஹார்

சென்னை – ஷேன் வாட்சன், முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, மகேந்திர சிங் தோனி, கேதார் ஜாதவ், டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர், மார்க் வுட், ஷர்துல் தாகூர்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.