இந்திய அணியின் நட்சத்திர டெஸ்ட் கிரிக்கெட் வீரர் செதேஸ்வர் புஜாரா புதிய சாதனை படைக்க உள்ளார். ஒரு டெஸ்ட் போட்டியின் ஐந்து நாட்களும் பேட்டிங் விளையாடிய 9வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற போகிறார் இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் செதேஸ்வர் புஜாரா.
தற்போது இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து விதமான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது. முதல் இந்த சுற்றுப்பயணம் டெஸ்ட் தொடருடன் தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 16ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது.
முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளே மழை குறுக்கிட்டது. இதனால், முதல் போட்டியின் டாஸ் முதல் நாளின் உணவு வேலையின் போது தான் போட்டார்கள். மழை பெய்து கொண்டே இருந்ததால் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
நினைத்ததை போலவே இந்திய அணிக்கு முதல் நாளில் இருந்தே பிரஷர் கொடுத்தார்கள் இலங்கை அணி. வந்த வேகத்தில் முதல் பந்திலேயே லோகேஷ் ராகுல் விக்கெட்டை எடுத்தார் சுரங்கா லக்மால். அதன் பிறகு வந்த விராட் கோலி மற்றும் ஷிகர் தவானும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். மீண்டும் மழை குறிக்கிட்டதால் முதல் நாள் ஆட்டத்தை முடித்து கொண்டார்கள்.
இரண்டாவது நாளில் புஜாரா மற்றும் ரஹானே தொடங்கினார்கள், ஆனால் அவர்களின் ஜோடி நிலைக்கவில்லை. ரஹானே சென்ற பிறகு அஸ்வின் வந்தார், சிறிது நேரம் விளையாடி கொண்டிருந்த அஸ்வின், அவரும் நடையை கட்டினார். மீண்டும் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் நிறுத்தப்பட்டது.
மூன்றாவது நாளில் புஜாரா அரைசதம் அடிக்க, சாஹா, ஜடேஜா மற்றும் முகமது ஷமியின் உதவியால் இந்திய அணி 172 ரன் அடித்தது. அதன் பிறகு முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இலங்கை அணி சிறப்பாக விளையாடி, அந்த அணியில் இருந்து மூன்று வீரர்கள் அரைசதம் அடிக்க, இலங்கை அணி முதல் இன்னிங்சில் 290 ரன் அடித்தது.
மீண்டும் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கம் தந்தார்கள். முதல் விக்கெட்டுக்கு 100 ரன் சேர்த்தார்கள் ராகுல் மற்றும் ஷிகர் தவான். 94 ரன்னில் இருக்கும் போது தவான் அவுட் ஆனார், இதனால் அடுத்து களமிறங்கினார் செதேஸ்வர் புஜாரா.
நாளை (நவம்பர் 20) ஆட்டம் தொடங்கும் போது ஒரு டெஸ்ட் போட்டியின் ஐந்து நாட்களிலும் பேட்டிங் செய்த 9வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெறுவார் இந்திய அணியின் செதேஸ்வர் புஜாரா. மற்ற 8 பேட்ஸ்மேனின் விவரத்தை கீழே காணுங்கள்: