டிஎஸ்பி பதவியை இழந்த இந்திய கிரிக்கெட் வீராங்கணை! 1
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மோகா நகரத்தை சேர்ந்த இந்தியாவின் நட்சத்திர வீராங்கணையான ஹர்மின்பிரீத் கவுர் சமீபகாலமாக மகளிர் கிரிக்கெட்டில்  தனக்கென தனி முத்திரையை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளார்.

குறிப்பாக கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் உலக கோப்பை தொடரின்  நாக் அவுட் போட்டியில் 171  ரன்களை குவித்தார். மேலும் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம்  இந்திய அணியை இறுதி போட்டிக்கு வரை எடுத்துச்சென்றார்.

இவரது செயலை பாராட்டும் விதமாக பஞ்சாப் மாநில முதல்வர் அமிர்ந்தர் சிங் இவருக்கு டிஎஸ்பி பதவியை வழங்குவதாக தெரிவித்தார், இதையெடுத்து கடந்த மார்ச் 1ஆம் தேதி இவர் டிஎஸ்பியாக பொறுப்பெற்றுக்கொண்டார்.
டிஎஸ்பி பதவியை இழந்த இந்திய கிரிக்கெட் வீராங்கணை! 2

இந்நிலையில் இவரது கல்வி சான்றிதழ்களை சரிபார்க்கும் போது இவர் மீரித்தில் இருக்கும் சவுதாரி சரன் சிங் பல்கலைகழகத்தில் பயின்றதாக கூறி சமர்பிக்கபட்ட சான்றிதழ் பொய்யானவை என தற்போது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து தற்போது பஞ்சாப் மாநில அரசு இவரை டிஎஸ்பி பதிவியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்துள்ளனர். மேலும் இவரது கல்வி தகுதி 12ஆம் வகுப்பு வரை என்று தெரியவந்துள்ளது.

மேலும் இவர் இந்திய அணியில் சிறப்பாக விளையாடிவரும் காரணத்தால் இவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க போவதில்லை என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

ஒருவேளை போலியான சான்றிதழ்களை வழங்கிய காரணத்தால்  இவர் மீது வழக்கு தொடுத்தால் இவரது அர்ஜூனா விருதும் பறிபோகும் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்கபடுகிறது.டிஎஸ்பி பதவியை இழந்த இந்திய கிரிக்கெட் வீராங்கணை! 3

தற்போது இவர் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் மகளிர் இங்கிலாந்து கியா சூப்பர் லீக் தொடரில் லங்காஷ்யர் அணிக்கு விளையாட உள்ளார்.

மகளிர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் இவர் இது போன்ற செயலில் ஈடுபட்டது  ரசிகர்கள்  அனைவரையும்  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *