மனைவியுடன் நெல்சன் மண்டேலா வீட்டிற்கு சென்ற ரஹானே! 1

மனைவியுடன் நெல்சன் மண்டேலா வீட்டிற்கு சென்ற ரஹானே!
தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் வீட்டை தனது மனைவியுடன் சென்று பார்த்துள்ளார். மண்டேலாவின் இல்லத்தில் பல புகைப்படங்களையும் அவர் எடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது மனைவியுடன் தென்னாப்பிரிக்காவை சுற்றி பார்த்து வருகிறார்.

ரஹானே மறைந்த தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா வீட்டிற்கு சென்று, எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. Image result for bhuvneshwar kumar wife south africaதென்னாபிரிக்காவின் முதல் கருப்பின ஜனாதிபதி என்ற பெருமையை பெற்று, அந்த நாட்டின் வரலாற்றில் புதிய தொரு மாற்றத்தை ஏற்படுத்தியவர் நெல்சன் மண்டேலா. இவரின் வீடு நாளடைவில் அருங்காட்சியமாக மாற்றப்பட்டது. தென்னாப்பிரிக்கா செல்லும், அனைவரும் தவறாமல் சென்று, நெல்சன் மண்டேலாவின் வீட்டை சுற்றிப் பார்ப்பது வழக்கம்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி அந்நாட்டின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விளையாட ரஹானே தனது மனைவியுடன் தென்னாபிரிக்கா சென்றுள்ளார்.Image result for bhuvneshwar kumar wife south africa அப்போது, தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் வீட்டை தனது மனைவியுடன் சென்று சுற்றிப்பார்த்துள்ளார். அத்துடன் மண்டேலாவின் இல்லத்தில் பல புகைப்படங்களையும் அவர் எடுத்துள்ளார். மண்டேலாவின் இல்லத்தை தனது மனைவியுடன் கண்டுகளித்தை குறித்தும் ரஹானே சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே, மறைந்த தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் வீட்டுக்கு சென்றார்.

 

இந்நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடும் லெவனில் இடம் பிடிக்காத ரஹானே, மூன்றாவது டெஸ்ட்டில் இடம் பிடித்துள்ளார். அவர் தனது மனைவி ராதிகாவுடன், ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலாவில் வீட்டுக்கு நேற்று சென்றார்.

ஜோகன்னஸ்பர்க், சொவடோவில் உள்ள மண்டேலாவின் வீடு தேசிய அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. 1999-ல் இந்த வீடு தேசிய பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த வீட்டை தனது மனைவியுடன் பார்வையிட்ட ரஹானே, அது பற்றி பிரமித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *