ஒருநாள் போட்டியில் ராகுல் டிராவிட்டின் மகன் 150 அடித்து துவம்சம்!! 1

ஒருநாள் போட்டியில் ராகுல் டிராவிட்டின் மகன் 150 அடித்து துவம்சம்!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் இன்னும் சில நாட்களில் தனது 45ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அதற்க்கு இரட்டிப்பு மகிழ்ச்சி சேர்க்கும் விதமாக தற்போது அவரது மகன் சமித் டிராவிட் ஒருநாள் போட்டியில் 150 அடித்து துவம்சம் செய்துள்ளார்.

கர்நாடக மாநில கிரிக்கெட் வாரியம் சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான அண்டர்-14 டிவிஷன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் 12 வயதான டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் மல்லையா அதிதி சர்வதேச பள்ளிகக்காக ஆடி வருகிறார்.ஒருநாள் போட்டியில் ராகுல் டிராவிட்டின் மகன் 150 அடித்து துவம்சம்!! 2

நேற்று நடந்த ஒரு போட்டியில் சமித் டிராவிட்டின் மகன் படிக்கும் பள்ளி விவேகானந்தா பள்ளியை எதிர்த்து ஆடியது. இந்த ஒருநாள் போட்டியில் அதிரடியாக ஆடிய சமித் 150 ரன்கள் குவித்தார். மேலும், இதே அணிக்காக ஆடி வரும் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆனில் ஜோஷியின் மகன் ஆர்யன் ஜோஷியும் 154 ரன்கள் குவித்தார்.

இறுதியாக ஒதுக்கப்பட்ட 50 ஓவர்களில் மல்லையா சர்வதேச பள்ளி 500 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய விவேகானந்தா அணி ஓரளவிற்கு கூட நன்றாக ஆடவில்லை. வெறும் 28 ஓவர்களில் 87 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது அந்த அணி. இதனால் டிராவிட் மகன் அணி 412 ரன் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.ஒருநாள் போட்டியில் ராகுல் டிராவிட்டின் மகன் 150 அடித்து துவம்சம்!! 3

ஜாம்பவான் டிராவிட் தற்போது இந்திய அண்டர்-19 அணியின் பயிற்சியாளராக உள்ளார். இந்த வருடம் நியூசிலாந்தில் நடைபெறும் அண்டர்-19 உகக்கோப்பை தொடருக்காக இந்திய அணியுடன் நியூசிலாந்து சென்றுள்ளார் டிராவிட்.

அதேபோல், ஆர்யன் ஜோஷியும் தந்தை சுனில் ஜோஷி வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சிற்கு ஆலோசகராக உள்ளார். இந்த இருவரும் அவர்களது காலத்தில் கர்நாடக அணிக்காக ஆடி யல சாதனைகளை படைத்துள்ளனர். தற்போது இருவரது மகன்களும் அண்டர்-14 லெவலில் இருந்தே அந்த சாதனைகளை படைக்க துவங்கிவிட்டனர்.ஒருநாள் போட்டியில் ராகுல் டிராவிட்டின் மகன் 150 அடித்து துவம்சம்!! 4

இதேபோல் சென்ற வருடம் கூட டிராவிட்டின் மகன் சமித், ஒரு அண்டர்-14 போட்டியில் 125 ரன் குவித்தார். அவரது தந்தையை போலவே சிக்ஸர்களே அடிக்காமல் வெறும் 22 ஃபோர்கள் மட்டும் அடித்து இந்த இன்னிங்ஸ் ஆடியுள்ளார் சமித். இந்த ஆட்டத்தை பார்த்த முத்தையா முரளிதரன் அவரையே பாராட்டியது குறிப்பிடத்தக்கது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *