இங்கிலாந்து செல்ல இருக்கும் இந்திய வீரர்களுக்கு பெங்களூருவில் உடல்தகுதி பரிசோதனை நடந்தது. இதில் சுரேஷ் ரெய்னா தேர்ச்சி பெற்று இந்திய அணியில் மீண்டும் இடம் பெற்றுள்ளார்.
Photo by Ron Gaunt / BCCI / SPORTZPICS
பிசிசிஐ நிர்வாகம் இந்திய வீரர்களுக்கு உடல்தகுதி பரிசோதனையை சென்ற மாதம் கட்டாயம் ஆக்கியது. மேலும், இதில் தேற்ச்சி பெரும் வீரர்கள் தான் அணியில் இடம் பெற முடியும் எனவும் கூறியது. இதற்கான பயிர்ச்சி ஜூன் மாதம் துவக்கத்தில் பெங்களூருவில் நடைபெற்றது.
இந்திய வீரர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இந்தியா ஏ வீரர்களுக்கும் இந்த பயிர்ச்சி நடைபெற்று இங்கிலாந்து அனுப்பப்பட்டனர். அதில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இஷான் கிஷான் சேர்க்கப்பட்டார்.
அதன் பிறகு, இந்தியா அணிக்கு பரிசோதனை நடந்தது. இதில் சமி தேர்ச்சி பெறவில்லை, இதனால் அவருக்கு பதிலாக நவதீப் சைனி சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சில வீர்களுக்கு சில தினங்களுக்கு முன்பு நடந்திருக்கிறது. இதில் சுரேஷ் ரெய்னாவும் ஈடுபட்டார்.
கடந்த முறை நியூசிலாந்து செல்லும் அணியில் பிட்னஸ் பயிர்ச்சியில் தேர்ச்சி பெறாததால் சுரேஷ் ரெய்னா நீக்கப்பட்டார். ஆனால் தற்போது இங்கிலாந்து செல்லும் அணியில், பிட்னஸ் டெஸ்டில் தேர்ச்சி பெற்று மீண்டும் இடம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து, ட்விட்டரில் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார், அவர் கூறியதாவது, மிகவும் சந்தோசமாக இருக்கிறது. பயிர்ச்சியில் தேர்ச்சி பெற்று மீண்டும் அணியில் இடம் பெறுவது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.