தல அஜித் தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிக முக்கியமான ஒரு நட்சத்திரம். இவர் தனது கடின உழைப்பினால் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர்.
இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு 70% சதவிதம் வரை முடிந்துள்ளது என்று சமீபத்தில் சில தகவல்கள் கசிந்திருந்தது.
மேலும் இப்படத்தில் இவருக்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்து வருகிறார் என்றும் நம்பக தன்மையான ஒரு தகவல்கள் வெளிவந்திருந்தது.
தல அஜித்தை பற்றி அவரது ரசிகர்கள் தினமும் சமூக வலைத்தளங்களில் எதாவது விஷயங்களை செய்து கொன்டே தான் இருப்பார்கள்.
அந்த வகையில் தற்போது தல அஜித்தின் வெறித்தமான ரசிகர் ஒருவர் உணவு பொருளான கிரீம் பிஸ்கெட்டுகளில் அஜித்தின் முகத்தை வரைந்து காட்டியுள்ளார்.
இதோ அந்த வீடியோ…
ட்விட்டரில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் அஜித்தின் புகைப்படத்தை பதிவிட கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா அஜித் புகைப்படத்தை லைக் செய்து உள்ளார் . இதை அறிந்த அஜித் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர் புகைப்படம் இதோ
கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்தில் மே 28-ந்தேதி வரை எந்தவிதமான தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்படாது என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் அங்கு உள்நாட்டில் நடக்கும் முதன்மையான கிரிக்கெட் போட்டியான கவுண்டி சீசன் தொடங்குவது குறைந்தது 7 வாரங்கள் தாமதம் ஆகிறது. 18 முதல்தர கவுண்டி அணிகள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசித்த பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த முடிவுக்கு வந்துள்ளது. எனவே ஜூன் 4-ந்தேதி தொடங்க வேண்டிய இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரும் தள்ளிப்போகிறது.

இதே போல் இலங்கை கிரிக்கெட் வாரியமும் தங்கள் நாட்டு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை மறுஅறிவிப்பு வரும்வரை தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளது.
அயர்லாந்து-வங்காளதேசம் அணிகள் இடையே மே மாதம் நடக்க இருந்த மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் நான்கு 20 ஓவர் போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.