சென்னை அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாட வேண்டும்- நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தல் 1

நாளை சென்னையில் நடைபெற உள்ள போட்டியில் சென்னை அணி வீரர்கள் தமிழக பிரச்சனைகளுக்காக போராடும் மக்களுக்கு ஆதரவாக கருப்பு பட்டை அணிந்து தான் விளையாட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

சென்னை அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாட வேண்டும்- நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தல் 2

ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி  சென்னையில் நடைபெறும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாயிகள், சமூக நல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ளது.

போட்டிகளை நடத்தினால் சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது.காவிரி விவகாரத்தில் தமிழர்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்கிற குரல் எழுந்துள்ளது.

சென்னை அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாட வேண்டும்- நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தல் 3

2ஆண்டு தடைகளுக்கு பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்கியுள்ளது. ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என அரசியல் கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. சில அரசியல் அமைப்புகள் சேப்பாக்கம் மைதானத்திற்கு கருப்பு உடை அணிந்து சென்று தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்க உள்ளதாக கூறினர்.

காவிரி பிரச்சினையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னையில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்தது. ஐ.பி.எல். போட்டியை ரத்து செய்யா விட்டால் கிரிக்கெட் வீரர்களை சிறை பிடிப்போம் என்றும் சில அமைப்பினர் எச்சரிக்கை விடுத்தனர்.திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடக்கும் என சிஎஸ்கே அணியின் சிஇஓ தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விவசாய மகளுக்கு ஆதரவு தரும் வகையில் அனைத்து ஆட்டகாரர்களும் கருப்பு வண்ண பட்டை அணிந்து விளையாட வேண்டும் என தெரிவித்தார்.

சென்னை அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாட வேண்டும்- நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தல் 4

அதேநேரத்தில் சென்னை அணி எதிர்கொள்ளும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் உள்ளார். இதுபோன்ற காரணங்களால் நாளை நடைபெறும் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதனை மிஞ்சும் வகையில் எதிர்ப்பும் அதிகரித்து உள்ளது.

இதனை தொடர்ந்து சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மேற்பார்வையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை அணி வீரர்கள் தங்கி உள்ள அடையாறு நட்சத்திர ஓட்டல் முன்பும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டிக்காக வீரர்கள் மைதானத்துக்கு வரும்போது அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடக்கூடாது என்று கருத்தில் கொண்டு அவர்கள் செல்லும் வழியிலும் பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 7 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அனைத்து போட்டிகளுக்குமே இதுபோன்று பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *