டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பற்றி பேசிய ரமீஸ் ராஜா

தற்போது டெஸ்ட் கிரிக்கெட் பிரபலமடைந்து வரும் வேளையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரமேஸ் ராஜா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட் போட்டிகளுக்கான இரண்டு மாத சாளரத்தை ஒதுக்கி வைக்க வலியுறுத்தியுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் போட்டிகள்க்கு ஒரு சாம்பியன் கோப்பை போட்டிகளை நடத்த வேண்டும் என்று ஒரு முறை குழு கூட்டத்தில் கூறியது ஆனால் இது வரை இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை எந்த ஒரு நாடும் இந்தனை ஆதரிக்கவில்லை.

ஆனாலும், டெஸ்ட் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கு ஆளும் குழுவிற்கு கெளரவமான ஒரு திட்டம் கிடைத்துவிட்டது, மேலும் அது ஒரு சாளரத்தை மட்டும் ஒதுக்கி வைக்க உச்சநீதி மன்றத்திற்கு அறிவுறுத்துகிறது என்று ரமேஸ் ராஜா உணர்கிறார்.

“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐ.சி.சிக்கு சிறந்த திட்டம் கிடைத்து உள்ளது என்று நான் நினைக்கிறேன்”

“அணைத்து டி20 போட்டிகளும் இரண்டு மாத காலத்திற்கு நிறுத்தப்பட வேண்டும், எனவே சிறந்த வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட அனுமதிக்கப்படுவார்கள்” என்று ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.

தற்போது ஆசிய நாடுகளில் அனைவரும் டி 20 போட்டிகள் விளையாடுவதையே விரும்புகிறார்கள் , இதனால் டெஸ்ட் போட்டிகள் மீது உள்ள ஆர்வம் குறைத்து வருகிறது. மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ஒன்றாக சேர்ந்து டெஸ்ட் போட்டிகள் விளையாட வேண்டும் என்றார்.

” டெஸ்ட் போட்டிகளின் சிறப்பை அனைவரும் உணர வேண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கும் அணைத்து நாடுகளும் தங்கள் ஆர்வத்தை டெஸ்ட் போட்டிகளிலும் காட்ட வேண்டும்”

உதாரணமாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி பிசிசிஐ இடம் இருந்து A- தர ஒப்பந்தத்தை பெற்றார்,மற்றும் ஷாஹித் அஃப்ரிடி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று பிசிபி இடம் இருந்து A- தர ஒப்பந்தத்தை பெற்றார். ஆசியா கிரிக்கெட்டில் நிறைய அழுத்தம் உள்ளது, ஆனால் நமக்கு சரியாக திட்டமிடப்பட்ட டெஸ்ட் போட்டியில் சாம்பியன்ஷிப் இருந்தால் டெஸ்ட் போட்டிகளுக்கு அதிக மரியாதையை கிடைத்து இருக்கும்” என்றார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா.

டெஸ்ட் போட்டிகளை விட டி20 போட்டிகளில் அதிக வருமானம் கிடைக்கின்றது இதனால் தான் அனைவரும் டி20 போட்டிகளையே விரும்புகிறார்கள் என்றார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துவதை பற்றி ஐசிசி வேகமாக செயல் பட வேண்டும் அப்போது தான் கிரிக்கெட் போட்டிகளில் டெஸ்ட் தொடர்களுக்கு ஒரு நல்ல மரியாதையை கிடைக்கும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் பற்றி ஐசிசி என்ன முடிவு எடுக்கிறது என்று நாம் பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.