ரஞ்சி டிராபி 2017/18 – கே.எல். ராகுல் ஏமாற்றம் ; ஜொலித்தார் முகமது சிராஜ்

தற்போது இந்திய அணி நியூஸிலாந்து அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார்கள். இதற்கான இந்திய அணியில் இருந்து லோகேஷ் ராகுலை நீக்கினார்கள். இதனால், ரஞ்சி டிராபியில் விளையாட சென்ற லோகேஷ் ராகுல், தேர்வாளர்கள் செய்தது தவறு என்று நிரூபிக்க தவறிவிட்டார்.

எப்பொழுதும் போல் கர்நாடக அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய லோகேஷ் ராகுல் 26 பந்துகள் சந்தித்து 4 ரன் மட்டுமே அடித்து ரவி கிரண் பந்துவீச்சில் போல்ட் ஆனார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் லோகேஷ் ராகுல் இடம் பெற்றுள்ளார். ஆனால், அவர் ரஞ்சி கோப்பையில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துவிட்டார். நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் அரைசதம் அடித்த லோகேஷ் ராகுல், ஐதராபாத் போட்டியில் விளையாட தவறிவிட்டார்.

இன்னொரு பக்கம், நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் முதல் முறை இடம் பிடித்துள்ள முகமது சிராஜ் கர்நாடகா அணியை துவம்சம் செய்தார். கர்நாடகாவின் வீரர்கள் ரவிக்குமார் சமர்த் மற்றும் மயங்க் அகர்வாலை அவுட் செய்த பின், உணவு இடைவெளியின் போது கர்நாடக அணி 81 ரன்னுக்கு 4 விக்கெட் பறிகொடுத்து பரிதாப நிலையில்
இருந்தது.

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க முயற்சி செய்யும் லோகேஷ் ராகுல் இது போல் ஏமாற்றுவது நல்லதில்லை. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய ராகுலை, ஒருநாள் போட்டிகளில் நடுவரிசையில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. ஆஸ்திரேலியா தொடரின் போதும் இந்திய அணியில் இருந்த ராகுல், நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் கிடைக்கவில்லை.

ராகுலை தொடக்கவீரராக தான் பார்க்கவேண்டும் என்று தெரிவித்தார் கேப்டன் விராட் கோலி.

“இந்த தொடரில் லோகேஷ் ராகுலுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பிடித்தார். லோகேஷ் ராகுல் அதிகமாக தொடக்கத்தில் தான் விளையாடுகிறார், தொடக்கவீரர்கள் இருப்பதால் நடுவரிசையில் ரஹானேவுக்கு இடம் கிடைக்கவில்லை, அதே சூழ்நிலை ராகுலுக்கும் ஏற்பட கூடாது. சிறிது நாள் உள்ளூர் போட்டிகளில் லோகேஷ் ராகுல் விளையாடட்டும், தொடர்ந்து நடுவரிசையில் விளையாடுவதால் தினேஷ் கார்த்திகை தேர்வு செய்துள்ளோம்,” கேப்டன் கோலி கூறினார்.

“நடுவரிசையில் எப்படி பேட்டிங் விளையாடவேண்டும் என்று அவருக்கு தெரியும் அதனால் அவர் தான் இந்த இடத்திற்கு சரியான வீரர். உள்ளூர் போட்டிகள் மற்றும் ஜூனியர் இந்திய அணிக்காக அவர் சிறப்பாக விளையாடி உள்ளார். இதனால சிறப்பாக விளையாடுபவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்,” என கோலி தெரிவித்தார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.