ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விதர்பாவின் வேகப்பந்து வீச்சாளர் குர்பானி ஹாட்ரிக் எடுத்து சாதனை செய்துள்ளார்.
இந்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற விதர்பா ஃபீல்டிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து பேட் செய்த தில்லி அணி முதல் நாள் முடிவில் 88 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. துருவ் 256 பந்துகளில் 17 பவுண்டரிகள் உள்பட 123, விகாஸ் மிஸ்ரா 5 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
Rajneesh Gurbani's hat-trick sends Delhi packing https://t.co/vQDvZLJ63m
— sportsfunda (@sportsfunda1) December 30, 2017
இன்று மிஸ்ரா 7 ரன்களில் குர்பானி பந்துவீச்சில் போல்ட் ஆனார். அடுத்தப் பந்தில் சயினியையும் போல்ட் செய்தார் குர்பானி. அந்த ஓவரின் கடைசி இரு பந்துகளில் விக்கெட்டுகள் எடுத்த குர்பானி தனது அடுத்த ஓவரின் முதல் பந்தில் துருவ் ஷோரேவையும் போல்ட் செய்து ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார். அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் கெஜ்ரோலியாவையும் போல்ட் ஆக்கி தில்லி அணியை நிலைகுலையைச் செய்தார். இதனால் தில்லி அணி கடைசி 4 விக்கெட்டுகளை 5 ரன்களில் இழந்தது.
தில்லி அணி எதிர்பாராதவிதமாக முதல் இன்னிங்ஸில் 295 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஹாட்ரிக் வீரர் குர்பானி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆதித்யா தாக்கரேவுக்கு இரு விக்கெட்டுகள் கிடைத்தன.