வருட துவக்கத்தில் 86வது ரேங்க், தற்போது நெ.1 !! யார் அந்த வீரர்? போட்டோ உள்ளே!! 1

வருட துவக்கத்தில் 86வது ரேங்க், தற்போது நெ.1 !! யார் அந்த வீரர்? போட்டோ உள்ளே!!

இப்படி ஒரு சாதனையை இதுவரை கேள்வி பட்டுள்ளீர்களா.? எப்படி ஒரு வீரர் வருட துவக்கத்தில் தரவரிசை பட்டியலில் 85வது இடத்தில் இருந்து தற்போது முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். சற்று ஆச்சரியம் தான். தொடர்ந்து மிகத் திறமையாக ஆடி அடுத்தடுத்த போட்டிகளிலும் அடுத்தடுத்த தொடர்களிலும் அசத்தி முதல் இடம் பிடித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி.வருட துவக்கத்தில் 86வது ரேங்க், தற்போது நெ.1 !! யார் அந்த வீரர்? போட்டோ உள்ளே!! 2

ஒருநாள் போட்டிக்கான ஐ.சி.சி தரவரிசை பட்டியலில் இந்த வருடம் பெரிய அளவில் சாதித்தது ஹஸன் அலி மட்டுமே. தற்போது இந்த வருட இறுதியில் வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் 759 ரேட்டிங்குடன் முதல் இடத்தில் உள்ளார் ஹசன் அலி.

கடந்த 2016ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக திருநாள் போட்டிகளில் அறிமுகமான ஹசன் அலி தற்போது வரை 26 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். 26 போட்டிகளில் 19.82 சராசரியில் 56 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அதிக பட்சமாக ஒரு ஆட்டத்தில் 34/5 என சாதனை செய்துள்ளார். வலது கை வேகப்பந்து வீச்சாளராக அவருக்கு தற்போது வெறும் 23 வயது மட்டுமே ஆகிறது.வருட துவக்கத்தில் 86வது ரேங்க், தற்போது நெ.1 !! யார் அந்த வீரர்? போட்டோ உள்ளே!! 3

இந்த வருடம் ஹசன் அலி :

ஆட்டம் – 26
வீசிய ஓவர் – 152.2
மெய்டன் ஓவர் – 7
கொடுத்த ரன் – 767 ரன்
மொத்த விக்கெட் – 45
சிறந்த பந்துவீச்சு – 34/5

ஐ சி சி ஒருநாள் போட்டி தர வரிசை பட்டியல்

1.ஹசன் அலி (பாக்)
2.இம்ரான் தாகிர் (தென்)
3.ஜஸ்ப்பிரிட் பும்ரா (இந்தியா)
4.ட்ரெண்ட் போல்ட் (நியூஸி)
5.ஜோஷ் ஹஸல்வுட் (ஆஸி)
6.காகிசோ ரபடா (தென்)
7.மிட்செல் ஸ்டார்க் (ஆஸி)
8.ரசிட் கான் (ஆப்கன்)
9.லியாம் ப்லன்க்கேட் (இங்கி)
10.மிட்செல் சாண்ட்னர் (நியூஸி)

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *