பேய் ஆட்டம் ஆடிய இயான் மார்கன்: உலககோப்பை தொடரில் படு மோசமான சாதனை படைத்த சுழல் சிங்கம் ரஷித் கான் 1

உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஆப்கான் வீரர் ரஷித் கான் மோசமான சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் ஆப்கான் அணிகளுக்கு இடையிலான போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆப்கான் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கி 6 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தனர். இதில், கேப்டன் மோர்கன் ருத்ர தாண்டவம் ஆடி 71 பந்துகளில் 148 ரன்கள் குவித்தார். இவர் 17 சிக்ஸர்கள் விளாசினார். பேரிஸ்டோவ் 90, ரூட் 88 ரன்கள் எடுத்தனர். கடைசி நேரத்தில், மொயின் அலி 9 பந்துகளில் 4 சிக்ஸர் விளாசி 31 ரன் குவித்தார்.

பேய் ஆட்டம் ஆடிய இயான் மார்கன்: உலககோப்பை தொடரில் படு மோசமான சாதனை படைத்த சுழல் சிங்கம் ரஷித் கான் 2

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த அணி பட்டியலில் தன்னுடைய முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. ஏற்கனவே ஒரு இன்னிங்சில் 24 சிக்ஸர்கள் அடித்து இங்கிலாந்து முதலிடத்தில் இருந்தது. தற்போது, இன்றையப் போட்டியில் இங்கிலாந்து அணி 25 சிக்ஸர் விளாசி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 23, நியூசிலாந்து அணி 22 சிக்ஸர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

பேய் ஆட்டம் ஆடிய இயான் மார்கன்: உலககோப்பை தொடரில் படு மோசமான சாதனை படைத்த சுழல் சிங்கம் ரஷித் கான் 3
MANCHESTER, ENGLAND – JUNE 18: Eoin Morgan of England pulls a ball as Ikram Ali Khil of Afghanistan looks on during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between England and Afghanistan at Old Trafford on June 18, 2019 in Manchester, England. (Photo by Gareth Copley-IDI/IDI via Getty Images)

இன்றையப் போட்டியில் சில சாதனை துளிகள்:

ஒருநாள் போட்டியின் ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர் – இங்கிலாந்து(25)
தனி நபராக ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் – மோர்கன்(17)
இங்கிலாந்து அணியின் அதிகபட்ச உலகக் கோப்பை ஸ்கோர் – 397
நடப்பு உலகக் கோப்பையில் அதிக ஸ்கோர்
கடைசி 10 ஓவரில் 142 ரன் அடிக்கப்பட்டது
உலகக் கோப்பையில் அடிக்கப்பட்ட நான்காவது அதிவேக சதம் – மோர்கன் (57 பந்துகளில்)

ரஷித் கானின் மோசமான சாதனை:

பேய் ஆட்டம் ஆடிய இயான் மார்கன்: உலககோப்பை தொடரில் படு மோசமான சாதனை படைத்த சுழல் சிங்கம் ரஷித் கான் 4

இந்தப் போட்டியில் அதிகம் அடித்து நொறுக்கப்பட்டது. 9 ஓவர்கள் மட்டுமே வீசி 110 ரன்களை வாரி வழங்கினார். இவர் ஓவரில் மட்டும் 11 சிக்ஸர் விளாசப்பட்டது. பவுலிங் ரன்ரேட் 12.22. உலகக் கோப்பை வரலாற்றில் ஒருவரது பந்துவீச்சில் அடிக்கப்பட்ட அதிகமாக ஸ்கோர் இது என்ற மோசமான சாதனை அவர் வசம் வந்தது. முஜிப் ரஹ்மன் தவிர அனைத்து வீரர்களின் பந்துவீச்சும் பதம் பார்க்கப்பட்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *